மறைந்த அனந்த் குமாரின் துறைகள் 2 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார் வகித்து வந்த துறைகள் இரு மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகளாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர் அனந்த் குமார் திங்கள்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 59. இந்த நிலையில் அவர் வகித்து வந்த துறைகள் இரு மத்திய அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி உரம் மற்றும் வேதித்துறை, மத்திய அமைச்சர் சதானந்த கெளடாவுக்கு கூடுதல் துறைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications