Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்.. 3 கோடி லட்சாதிபதிகள்.. பெண்களுக்காக பாஜகவின் முக்கிய அறிவிப்புகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார். பாஜகவின் தேர்தல் அறிக்கை பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய நாட்டின் 4 தூண்களை பிரதானப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார் பிரதமர் மோடி.

Sanitary napkins for 1 rupee BJP election promises for Women

நாடு முழுவதும் ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி வழங்கியுள்ளது. மேலும், பெண்களை மையமாக வைத்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது பாஜக.

பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான வாக்குறுதிகள்:

1. மக்கள் மருந்தகங்களில் பெண்களுக்கு ரூ.1 விலையில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவற்றை தடுப்பதிலும் குறைப்பதிலும் கவனம் செலுத்தும் சுகாதாரச் சேவைகள் விரிவுபடுத்தப்படும்.

3. கிராமப்புறங்களில் உள்ள 3 கோடி பெண்கள் தொழில்முனைவோர்களாக மாற்றப்பட்டு 3 கோடி பெண் லட்சாதிபதிகள் உருவாக்கப்படுவார்கள்.

4. மகளிர் சுயஉதவி குழுக்களை சேவைத் துறையில் ஒருங்கிணைத்து அவர்களின் சந்தை அணுகல் மேம்படுத்தப்படும்.

5. பெண்களுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகளின் தங்குமிடங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கி, தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும்.

6. நாடு முழுவதும் பொது இடங்களில் பெண்களுக்கு அதிக அளவில் கழிப்பறைகள் கட்டப்படும்.

7. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நாரி சக்தி வந்தன் அதினியம் திட்டம் அமல்படுத்தப்படும்.

8. காவல் நிலையங்களில் சக்தி டெஸ்க் விரிவுபடுத்தப்படும் மற்றும் அவசரகால பதிலளிப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

மேலும் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள்:

* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்.

* 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை.

* 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.

* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து நீக்கியுள்ளோம். தொடர்ந்து இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறோம்

* 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.

* 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

* மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.

* இந்தியாவின் கௌரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும்.

* மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர்.

* வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

* கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம்.

* நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண். தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை. தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

* முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்

* அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

* சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

* மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம்.

* நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+