Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன சமஸ்கிருதமா? தமிழ் இலக்கியம் தெரியுமா? ராஜ்நாத் சிங்கிற்கு பாடமெடுத்த ஆ ராசா! தெறித்த லோக்சபா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று சந்திரயான் திட்டம் குறித்து விவாதம் நடந்தது. இந்த வேளையில் சமஸ்கிருதத்தில் விஞ்ஞான கருத்துகள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய நிலையில் தமிழ் இலக்கியம் தெரியுமா? எனும் வகையில் ஆ ராசா பட்டியலிட்டு பேசி லோக்சபாவை தெறிக்கவிட்டார்.

நாடாளுமன்ற சிறப்பு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது. லோக்சபாவில் நேற்று முன்தினம் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Sanskrit? Do you know Tamil literature? DMK MP A Raja speak about Chandrayaan 3 in Loksabha

இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. அதன்பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே லோக்சபாவில் இன்று நாடாளுமன்றத்தின் பிற செயல்பாடுகள் நடந்தன. அப்போது சந்திரயான் திட்டம் குறித்து பேசப்பட்டது. இந்த வேளையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமஸ்கிருதத்தில் தான் விஞ்ஞான ரீதியிலான கருத்துகள் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்பி ஆ ராசா பதிலடி கொடுத்தார்.

இதுதொடர்பாக திமுக எம்பி ஆ ராசா பேசியதாவது: பாதுகாப்பு துறை அமைச்சர் சமஸ்கிருத்ததில் விஞ்ஞான கருத்துகள் இருப்பதாக கூறினார். ஆனால் இந்த நாட்டில் 2 விதமான கருத்துகள் இருந்திருக்கின்றன. இந்த நாடு ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இந்த நாடு ஐம்பூதங்களால் உருவானது. பஞ்ச பூதங்கள் இல்லாவிட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இதுதான் அறிவியல்.

இந்த உலகின் எடை எப்போதும் ஒரே அளவி்ல் தான் இருக்கிறது என சொல்லப்பட்டது. ஆனால் எங்களின் தமிழ் புலவர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறார்கள். திருவள்ளூவர் ‛சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என தெரிவித்துள்ளார். அதேபோல் சந்திரன் குறித்த பாரதியின் கூற்று இன்று மெய்யாகி உள்ளது. ‛வானை அளப்போம், கடல் மீனை அளப்போம். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என கூறியுள்ளார்.

தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகளுக்கு எதிரான விஷயங்களை பார்க்க முடியாது. பெரியாரால் உருவாக்கப்பட்டு அண்ணாவல் வளர்க்கப்பட்டு ஸ்டாலின் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டவன். இந்தியாவின் முதல் இடத்தில் முக ஸ்டாலினுடன் நான் பயணிப்பதில் பெருமையாக கூறுகிறேன். சந்திரயானை நிலவின் சுற்றுவட்டபாதையில் வைக்கப்பட்டுள்ளதால் மூடநம்பிக்கைகள் மறைந்துள்ளன'' எனக்கூறி தெறிக்கவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+