மும்பை தாக்குதல்: கர்கரேவை கொன்றது தீவிரவாதியா, RSS பாசமுள்ள போலீஸ்காரரா? விசாரிக்க கோரும் சசி தரூர்
டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கர்கரே மரணமடைந்திருந்த நிலையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான விஜய் நாம்தேவ்ராவ் வடேட்டிவார் பேசிய கருத்துகள் பேசுபொருள் ஆனது.

உயிரிழப்பு: அதாவது மும்பையில் கடந்த 2008இல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது பாதுகாப்பு அதிகாரிகள் பலர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அப்படி அந்த மோதலில் உயிர்நீத்தவர்களில் முக்கியமானவர் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே. இவர் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே கர்கரேவை கொன்றது பயங்கரவாதி அஜ்மல் கசாப் இல்லை.. ஆர்எஸ்எஸ் மீது பற்றுள்ள காவலர் ஒருவரே கர்கரேவை கொன்றதாக கூறியது பேசுபொருள் ஆனது. அதாவது அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "மும்பை போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவைக் கொன்ற தோட்டா கசாப்பின் துப்பாக்கியிலிருந்து வந்தது இல்லை.
பாராமதியில் எதிரிகளாக பவார் குடும்பம்! அத்தியாத்தையே 'முடித்து'விட ஆர்.எஸ்.எஸ்.- பாஜக மும்முரம்!
ஆர்எஸ்எஸ் மீது பற்று: மாறாக அது ஆர்எஸ்எஸ் மீது பற்று கொண்ட இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து வந்தது.. இந்த உண்மையை நீதிமன்றத்தில் மறைத்தவர் தான் அப்போது அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த உஜ்வல் நிகம்.. அவருக்குத் தான் இப்போது பாஜக மும்பை நார்த் சென்டரல் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது.. பாஜக ஏன் இதுபோன்ற துரோகிகளை ஆதரிக்கிறது என்று புரியவில்லை" என்று கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு இணையத்தில் பேசுபொருள் ஆனது. இதையடுத்து விஜய் வடேட்டிவார் தனது பேச்சு குறித்து விளக்கமளித்தார். அதாவது இது தன்னுடைய சொந்த கருத்து இல்லை என்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி எஸ்.எம்.முஷ்ரிப்பின் புத்தகத்தில் இருந்து மேற்கோள் மட்டுமே காட்டியதாக வடேட்டிவார் தெரிவித்தார்.
சசி தரூர்: அதேநேரம் பாஜக தரப்பில் இதற்குக் கடுமையான பதிலடிகளும் வந்தன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விஷயத்தை மிகவும் தீவிரமானது என்று கூறிய சசி தரூர், "மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவர் விஜய் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு முக்கியமானது. ஏனென்றால் அவர் முன்னாள் காவல்துறை ஐஜி எஸ்எம் முஷ்ரிப்பின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கருத்தைத் தான் எழுப்பி இருக்கிறார்.
கர்கரேவின் உடலில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களை அஜ்மல் கசாப் சுட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அது போலீஸ் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று முஷ்ரிப் கூறியிருந்தார்.. இந்தக் குற்றச்சாட்டைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று சசி தரூர் தெரிவித்தார்.
மும்பை தாக்குதல்: கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரியான கர்கரே பணியில் இருந்தபோது கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2012இல் அவர் புனேவில் தூக்கிலிடப்பட்டார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications