பிரதமர் ஆவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.. சத்ருகன் சின்ஹா பொளேர் கேள்வி
டெல்லி: மோடிக்கு பிரதமர் ஆவதற்கு அவர் முதல்வராக இருந்ததை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது என்று நடிகரும் மோடியின் நண்பருமான சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது காங்கிரசில் இருக்கும் சத்ருகன் சின்ஹா மோடியின் சமீபத்திய பேட்டி குறித்து பேசியபோது பிரதமராவதற்கு தனிப்பட்ட குணநலன் எதுவும் தேவை இல்லை. வெறும் எண் விளையாட்டு அது. போதிய எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகிவிட முடியும். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துவிட்டால் பிரதமர் ஆவது என்பது இன்னும் எளிதான காரியமாக அமைந்து விடுகிறது.

அப்படி பார்க்கும்போது நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அவர்களுக்கும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்ததை தாண்டி மோடிக்கு வேறு என்ன சிறப்பு தகுதி வந்து விட்டது. தன்னைப் போன்றவர்களே மோடியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததாக கூறியுள்ளார் சத்ருகன் சின்ஹா.
பிரதமர் மோடி நேற்று சத்ருகன் சின்ஹாவுக்கு அளித்த பேட்டி அரசியல் சார்பற்றது என்று கூறி சில விசயங்களை குறிப்பிட்டிருந்தார். இந்த பேட்டி சில சர்ச்சைகளை உண்டு பண்ணியிருந்த சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்ருகன் சின்ஹா மோடியால் எந்த ஒரு பேட்டியையும் ஒத்திகை இல்லாமல் கொடுக்க இயலாது, எழுதி வைக்காமல் எந்த ஒரு பதிலையும் அவரால் கூற முடியாது.
எந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் நரேந்திர மோடியை பேட்டி காண வேண்டும் என்பது தனக்கு ஆசை என்று கூறியுள்ள சத்ருகன் சின்ஹா பிரதமரை பேட்டி எடுத்த அக்சய் மோடியை, மோடியின் கொள்கைகளை முன்னிலைப் படுத்தி வருகிறார். அதில் அவருக்கு ஆதாயமும் உள்ளது என்று சத்ருகன் சின்ஹா மோடியை வெளுத்து வாங்கியுள்ளார்.
மேலும் தனது மனைவி வேறு கட்சியில் உள்ளது குறித்து பேசிய அவர் இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் இருவருக்கும் ஒன் மேன் ஆர்மி மற்றும் டூ மேன் ஆர்மியை வீழ்த்துவதே இலக்கு என்று மோடி மற்றும் அமிட்ஷா குறித்து குறிப்பிட்டார்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications