பாட்னா சாஹிப்பில் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்துடன் மோதும் காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா!
டெல்லி: பீகார் மாநிலம் பாட்னா சாஹிப்பில் காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜகவின் சார்பில் பீகாரின் பாட்னா சாஹிப்பில் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா இரு முறை போட்டியிட்டு எம்பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜகவில் அதிருப்தி எம்பியாக இருந்து வந்தார்.

ரபேல் குறித்து பல்வேறு கேள்விகளை சின்ஹா எழுப்பினார். இதனால் பாஜக தலைமை இவர் மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்களான எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மோடியும் அமித்ஷாவும் நடத்திய விதம் சரியில்லை என கூறி அக்கட்சியிலிருந்து சின்ஹா விலகினார்.
இதையடுத்து ஏப்ரல் 6-ஆம் தேதி காங்கிரஸில் இணைவதாக தெரிவித்தார். மேலும் தான் காங்கிரஸில் இணைவதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில் பாஜக மூத்த தலைவர்களை அந்த இருவரும் நடத்திய விதம் என்னை மிகவும் பாதித்துவிட்டது.
மேலும் என்னை திரிணமூல், ஆம் ஆத்மி கட்சியினர் அழைத்தனர். ஆனால் பாட்னா சாஹிப்பில் எனக்கு வாய்ப்பு தரும் கட்சியில் இணைய வேண்டும் என விரும்பினேன். அதன்படி காங்கிரஸில் இணையவுள்ளேன் என்றார்.
இதையடுத்து இன்றைய தினம் ராகுலை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சத்ருகன் சின்ஹா இணைந்தார். மேலும் அவர் பாட்னா சாஹிப்பில் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!











Click it and Unblock the Notifications