நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

வரும் நவம்பர் 30ம் தேதியுடன் (நாளை) இதற்கான கால அவகாசம் முடிகிறது. ஆனால் குறைந்த கால அவகாசமே கொடுக்கப்பட்ட காரணத்தால், பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கப்பட முடியாமல் போனது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது.
இதையடுத்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரியும், நீட் தேர்விற்கான வயது வரம்பை அதிகரிக்க கோரியும் பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் ஒன்றாக விசாரிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டிசம்பர் 7ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாளையுடன் நீட் தேர்வு விண்ணப்பத்தை அனுப்ப அவகாசம் முடிகிற நிலையில் மாணவர்களுக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சி அளித்துள்ளது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.
மேலும் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையிலும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி இடஒதுக்கீடு இல்லாதவர்களும் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம்.
முன்பு இடஒதுக்கீடு உள்ளவர்கள் மட்டுமே 30 வயது வரை நீட் எழுத முடியும். இடஒதுக்கீடு இல்லாதவர்கள் 25 வயது வரை நீட் எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய வயது வரம்பை அளித்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications