நீட் தேர்வுக்கு தடை கிடையாது.. 6 மாநில அரசுகளின் சீராய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-6 வரையும் நடக்கும் என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு இடையே நீட் தேர்வு நடக்க உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு இடையே நீட் தேர்வை நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையே தேர்வுகள் நடப்பதை பல்வேறு மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்துள்ளது. கடினமான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுத முடியாது.
இதனால் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த கூடாது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வந்தது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் வழக்கு தொடுத்தது.
ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு நீட் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட காட்சிகள் சார்பாக இந்த மறுசீராய்வு மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
ஆனால் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications