அரசியலமைப்பு முகப்புரையில் 'மதச்சார்பின்மை'.. சுப்பிரமணிய சுவாமி தொடுத்த மனு தள்ளுபடி
டெல்லி: இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் 42வது சட்டத்திருத்தத்தின்போது சேர்க்கப்பட்ட 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று வலதுசாரி, இந்துத்துவா அமைப்பினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி உட்பட மூவர் இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியா அடிப்படையில் ஒரு துணை கண்டனம். ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கான தனி மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு, மத உணர்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா என்கிற ஓர் உணர்வோடு அனதை்து மாநிலங்களும் இணைந்து இருகின்றன. ஆனால் சில அமைப்புகள் இந்தியா என்பது ஒரே நாடு என்றும், அதற்கு என ஒரே அடையாளம் மட்டுமே இருப்பதாக கூறி வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதனை வலதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படி இருக்கையில்தான் கடந்த 1976ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் 42வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்நாட்டு மதச்சார்பற்ற, சோசலிச குடியரசு என்று மாற்றப்பட்டது. இந்த திருத்தத்தை நீக்க வேண்டும் என்று மீண்டும் வலதுசாரிகள் வலியுறுத்த தொடங்கினர். உடன் இந்துத்தவா அமைப்புகளும் குரல் கொடுத்தன. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தொடுத்திருந்தனர். அதில் முக்கியமான நபர்தான் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி.
மனுக்களை தனித்தனியாக விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், அனைத்தையும் சேர்த்து ஒரே மனுவாக விசாரிக்க முடிவெடுத்தது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது. திருத்தம் மேற்கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இப்போது ஏன் பிரச்னையை கிளப்புகிறீர்கள் என்று நீதிபதி கண்ணா கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த மனுவின் மீது தீர்ப்பு கடந்த 22ம் தேதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனெவே கடந்த அக்.21ம் நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது சோசலிசம், மதச்சார்பின்மை குறித்து நீதிபதி கண்ணா தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தார். அதாவது“அரசியலமைப்பு கட்டமைப்பின் அடிப்படை என்பது மதச்சார்பின்மைதான். இந்த நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மதச்சார்பின்மை அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன. பிரெஞ்சு மதச்சார்பின்மை மாதிரியைப் போலல்லாமல், மதச்சார்பின்மையின் புதிய மாதிரியை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சோசியலிசம் என்றால் நாட்டின் அனைத்து வளங்களும் அனைத்து வாய்ப்புகளும் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications