அனைத்து வழக்கில் இருந்து முகமதும் ஜுபைருக்கு ஜாமீன்! ட்விட் செய்ய தடையில்லை! உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் இருந்து ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆல்ட் நியூஸ் என்ற பேக்ட் செக் இணையதளத்தில் இணை நிறுவனராக உள்ளவர் முகமது ஜுபைர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள இவர், அவ்வப்போது தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகளைக் கூறி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 27ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த 2018ம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து இருந்ததாகவும், அதுகுறித்த புகாரில் முகமது ஜுபைரை கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
அதன்பிறகு முகமது ஜுபைர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இருந்தும் அவர் மீதான மற்றொரு வழக்கில் இன்னும் தீர்ப்பு வராத நிலையில், அவர் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் இருந்தது.
இந்த நிலையில் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் இருந்து இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், முகமது ஜுபைருக்கு எதிரான அனைத்து எஃப்.ஐ.ஆர்.-களிலும் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்.
முகமது ஜுபைரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. அனைத்து வழக்குகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர்-களை ஒன்றாக இணைத்து டெல்லியில் உள்ள ஒரே விசாரணை அதிகாரியால் கையாளப்பட வேண்டும். அதேபோல் இன்று மாலை 6 மணிக்குள் முகமது ஜுபைர் ஜாமினில் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வழக்கறிஞரை வாதாட வேண்டும் என்று கூறுவதை போல், பத்திரிகையாளரை எழுத கூடாது என்று சொல்லுவதும். அதனால் அவரை எழுதக் கூடாது என்று உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications