முல்லைப்பெரியாறு அணையில் 139 அடி தண்ணீர் தேக்கலாம்.. கேரளாவின் தந்திரத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. 155 அடி உயரமுள்ள இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக விளங்கி வருகிறது.

முல்லை பெரியாறு அணையில் தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்ட அணைத்து பணிகளையும் மேற்கொள்ளும் தமிழகம், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது

பொய்க்கதைகள்

பொய்க்கதைகள்

ஒரு வாரத்துக்கு முன்பு பலத்த மழை கொட்டியதால் வழக்கம்போல் முல்லைபெரியாறு அணைக்கு எதிரான பொய் புகார்களை வழக்கம்போல் கேரளா கூற ஆரம்பித்தது. முல்லை பெரியாறு அணையில் அதிகளவு நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். பல லட்சம் மக்கள் உயிரிழந்து விடுவார்கள் என்று கேரளவாசிகள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். பிரித்விராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட சில மலையாள நடிகர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள்ளனர்.

பாதுகாப்பு குழு

பாதுகாப்பு குழு

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய மூவர் குழு மற்றும் ஐவர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இரு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த குழுவினர் அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அளித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பியும் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கேரளாவில் கன மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும். அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை முழுமையாக கேரளாவின் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, 'முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவு 137 அடியாக தான் இருக்கிறது. தற்போது மழை பொழிவும் அந்த பகுதியில் இல்லாததால் தற்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் விசாரிக்க தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டது.

நீரின் அளவு 137 அடி

நீரின் அளவு 137 அடி

இதனை தொடர்ந்து கூறிய நீதிபதிகள் ;தற்போது முல்லை பெரியாறு அணையின் நீரின் அளவு 137 அடியாகதான் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அவசரமில்லை . அணையில் தற்போதைய நீர் தேக்கம் விவகாரம் குறித்த மத்திய நீர் வளத்துறையின் முடிவு தொடர்பாக மனுதாரர் மற்றும் கேரள அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும்' எனக்கூறி வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது.

கேரளாவின் வாதம்

கேரளாவின் வாதம்

அப்போது நீதிபதிகளிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த கேரளா, ''126 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணை சுண்ணாம்பு-சுர்கியால் மூலம கட்டப்பட்டது. தற்போது அணை பழுதடைந்த நிலையில் உள்ளதால் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தும்போது அணையின் மீது செயல்படும் நீர் அழுத்தம் மிக அதிக அளவு இருக்கும். இதனால் பெரும் விளைவுகள் ஏற்படலாம். எனவே அணையில் 136 அடி தண்ணீருக்கு மேல் தேக்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறியது.

வைகை அணையின் கொள்ளவு

வைகை அணையின் கொள்ளவு

மேலும், தண்ணீர் இருப்பு குறையாமல் தண்ணீரை பாதுகாப்பான அளவில் வைத்திருக்க தமிழகம் பல நடவடிக்கைகளை எடுக்கலாம். வைகை அணையின் கொள்ளளவை உயர்த்தி அதிக நீரை சேமிக்க முடியும். தற்போதுள்ள சுரங்கப்பாதையின் கொள்ளளவை அதிகரிக்கலாம் அல்லது முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து அதிக தண்ணீர் எடுப்பதற்காக கூடுதல் சுரங்கப்பாதை அமைக்கலாம் என்றும் கேரள அரசு கூறியது.

கேரளாவின் தந்திரம்தான் இது

கேரளாவின் தந்திரம்தான் இது

இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ' உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கேரளா ஏதாவது காரணம் கூறி 142 அடியிலிருந்து குறைக்க தந்திரம் செய்கிறது. தற்போது அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டாலும் 139.5 அடிதான் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது' என்று வாதிட்டார்.

139.5 அடி தண்ணீர் தேக்கலாம்

139.5 அடி தண்ணீர் தேக்கலாம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீதிபதி கான்வில்கர், ''முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை நவம்பர் 10-ம் தேதி வரை 139.5 அடியாக வைத்து கொள்ளலாம். அணை பகுதியில் கனமழை போன்றவற்றால் நிலைமை மாறினால் அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்'' என்று கூறி அடுத்த விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+