டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

22 போலி என்கவுண்டர் வழக்கை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்.. மோடிக்கு நெருக்கடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    22 போலி என்கவுண்டர் வழக்கை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்- வீடியோ

    டெல்லி: குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற 22 போலி என்கவுண்டர் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

    மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆகியோர் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    SC to hear pleas on 22 fake encounters in Gujarat, when Modi was CM

    2007ம் ஆண்டில் மனுதாரர்கள், வர்கீஸ் மற்றும் ஜாவித் அக்தர் ஆகிய இருவரும், இந்த மனுவை தாக்கல் செய்தனர். 2002 மற்றும் 2006ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத்தில் 22 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    21 போலி என்கவுண்டர்கள் என மனுவில் குறிப்பிட்டிருந்தார் வர்கீஸ். 2014ல் வர்கீஸ் மரணமடைந்த நிலையில், ஜாவித் அக்தர், அந்த மனுவில் தன்னையும் இணைத்துக்கொண்டு, 22 போலி என்கவுண்டர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    2012ம் ஆண்டு, முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையில், இதுகுறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தா, குறுக்கிட்டு, பேடி வழங்கிய அறிக்கை அம்சங்களை பொது வெளியில் வெளியிட கூடாது என கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறைமுடிந்த பிறகு எடுத்துக்கொள்ளவும் கோரிக்கைவிடுத்தார்.

    ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதற்குள்ளாக, பேடியின் அறிக்கை தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். போலி என்கவுண்டர்கள் நடைபெற்றதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் குஜராத்தில், நரேந்திர மோடி முதல்வராக பதவி வகித்து வந்தார் என்பதால் இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும், முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    The Supreme Court will hear a plea on the 22 alleged fake encounters that took place in Gujarat when Narendra Modi was the Chief Minister of the state. The petitions were filed by veteran journalist, B G Verghese and lyricist, Javed Akhtar. They alleged that the case relating to the 22 encounters must be heard by the Supreme Court. The court said that the petitions need to heard.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X