7 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை.. கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆப்ஷன் கொடுத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: கடந்த 1979 ஆம் ஆண்டு கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலின் போது சக கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்ட நபர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு 67 வயதாகும் நிலையில், ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டுகள் சிறை இரண்டில் எது என முடிவு செய்து கொள்ளலாம் எனவும் ஜாமீன் கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 1979 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் நடைபெற்ற மோதலின் போது சக மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்ட 67 வயது முதியவருக்கு ஆயுள் தண்டை அல்லது 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனை என இரண்டில் ஒரு ஆப்ஷனை எடுத்துக்கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆப்ஷன் கொடுத்த சுப்ரீம் கோர்ட்
மேல் முறையீட்டில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட போதிலும் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆப்ஷனாக வழங்கியிருப்பது சுவாராசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
உத்தர பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் லோக்மன்யா கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 1979 ஆம் ஆண்டு அப்போது பயின்ற மாணவர்களுக்கு இடையே மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது ஏற்பட்ட மோதலில் 21 வயதான ஹரி சங்கர் ராய் என்ற மாணவர் 19 வயதான கிருஷ்ண குமார் என்பவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ண குமார் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி உயிரிழந்தார்.
மேல் முறையீடு செய்தார்
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 1983 ஆம் ஆண்டு ஹரி சங்கர் ராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்திய தண்டனை சட்டம் 304-I ன் கீழ்அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஹரி சங்கர் ராஜ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் 41 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்தது. தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராய் மேல் முறையீடு செய்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஐபிசி 302 ன் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல் முறையீடு செய்தார் ராஜ்.
தக்க தண்டனையை அனுபவிக்க வேண்டும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி பிஆர் காவாய், நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், கொலைக் குற்றத்திற்கான தண்டனை பிரிவு 304-I மாற்றப்பட்டாலும், வெறும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ராய் தப்பிக்க முடியாது. ஒரு நபர் தனது உயிரை இழந்து இருக்கிறார். எதுவாக இருந்தாலும் சரி... இந்த குற்றத்திற்காக தக்க தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.
உடனே ராய் தரப்பு வழக்கறிஞர், ரயக்கு தற்பொது 67 வயது ஆகிறது. பல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்படுகிறார். அவரது மனைவியும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, கருணை அடிப்படையில் இதை அணுக வேண்டும் என வாதிட்டார். எனினும், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று உறுதியாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் கருணை காட்ட முடியாது எனவும் விடுவிக்க கோரி எப்படி வாதம் முன்வைக்கலாம் என்று குற்றவாளி தரப்பு வழக்கறிஞரை எச்சரித்தது.
7 ஆண்டுகள் தண்டனையாக குறைக்க தயார்
நீங்கள் ஏற்றுக்கொண்டால் குற்றவாளிக்கு 302 ஐபிசி பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட தண்டனையை 304 -I கீழ் மாற்றி 7 ஆண்டுகள் தண்டனையாக குறைக்க தயார் என்று தெரிவித்தது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் குடும்பத்தினருக்குமான தற்போதய தொடர்பு உள்ளிட்டவை தொடர்பாக உரிய தகவல்கள் பெறுமாறு மாநில அரசு தரப்பு வழக்கறிஞரை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம் விசரணையை ஒத்திவைத்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications