பாலுறவு வயதை 16 ஆக குறைக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்திற்கு மூத்த வழக்கறிஞர் வேண்டுகோள்!
டெல்லி: பாலுறவு வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், நீதிமன்றத்திற்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வ ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அவர், தற்போதுள்ள சட்டமானது இளம் பருவத்தினரின் பரஸ்பர காதல் உறவுகளை குற்றமாக்குகிறது என்றும், இது அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என்றும் வாதிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, "தற்போதுள்ள சட்டமானது, இளம் பருவத்தினரின் சுயாட்சி, முதிர்ச்சி மற்றும் சம்மதம் தெரிவிக்கும் திறனைப் புறக்கணித்து, அவர்களின் பரஸ்பர உறவுகளை தவறாகப் பயன்படுத்துவதாக கருதுகிறது. குற்றவியல் சட்டம் (திருத்த) சட்டம், 2013 மூலம் சம்மத வயதை 16-லிருந்து 18 ஆக உயர்த்த எந்த நியாயமான காரணமும் இல்லை. இதற்கான பகுத்தறிவு காரணமோ அல்லது அனுபவ தரவுகளோ இல்லை.

பாலியல் சம்மத வயதை உயர்த்துவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. இது நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைக்கு எதிராக அமைந்திருக்கிறது. இன்றைய இளம் பருவத்தினர் விரைவில் பருவமடைந்து, தாமாகவே காதல் மற்றும் பாலியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் பெற்றுள்ளனர்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் கண்டுபிடிப்புகள் உட்பட அறிவியல் மற்றும் சமூகத் தரவுகள், டீனேஜ் வயதினரிடையே பாலியல் செயல்பாடு அசாதாரணமானது அல்ல என்பதைக் காட்டுகின்றன. கடந்த 2017-க்கும் 2021-க்கும் இடையில் POCSO சட்டத்தின் கீழ் 16-18 வயதுடைய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் 180% அதிகரித்திருக்கின்றன. இதற்கு காரணம் பாலுறவுக்கான வயதை 18ஆக அதிகரித்ததுதான்.
பெரும்பாலான புகார்கள் பெற்றோர்களால், குறிப்பாக சாதி அல்லது மத வேறுபாடு காரணமாக ஏற்படும் காதல் உறவுகளில், பெண்களின் விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்யப்படுகின்றன. பரஸ்பர உடலுறவை குற்றமாக்குவது இளம் தம்பதிகளை மறைந்து வாழவும், திருமணம் அல்லது சட்ட சிக்கல்களில் சிக்கவும் வழிவகுக்கும்.
இதனைத் தடுக்க, 16 முதல் 18 வயது வரையிலான இளம் பருவத்தினரின் பரஸ்பர பாலியல் நடவடிக்கைகளை POCSO மற்றும் IPC சட்டத்தின் கீழ் இருந்து விலக்களிக்க வேண்டும். மேலும், இளம் பருவத்தினரிடையே பாலியல் உறவை குற்றமாக்குவது தன்னிச்சையானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கு எதிரானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்டப்பூர்வ திறன் என்பது வயது சார்ந்தது அல்ல. இங்கிலாந்தின் கில்லிக் தீர்ப்பு மற்றும் இந்தியாவின் புட்டாசாமி தீர்ப்பை பாருங்கள். முடிவெடுப்பது என்பது தனி உரிமையாகும். அது பாலியல் தேர்வுகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட இளம் பருவத்தினருக்கும் பொருந்தும்.
பல்வேறு உயர் நீதிமன்றங்களில், குறிப்பாக பாம்பே, மெட்ராஸ் மற்றும் மேகாலயா நீதிமன்றங்களில் POCSO சட்டத்தின் கீழ் இளம் வயது சிறுவர்களை தானாக முன்வந்து வழக்கு தொடர்வதை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். மேலும், சிறுவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பாலியல் செயல்களும் கட்டாயமானவை அல்ல என்றும், சட்டம் துஷ்பிரயோகம் மற்றும் பரஸ்பர உறவுகளுக்கு இடையே வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன.
16 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினரின் பரஸ்பர உடலுறவு என்பது சட்டவிரோதமானது அல்ல. அதை POCSO மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டங்களின் கீழ் சேர்க்கக்கூடாது. மேலும், POCSO சட்டத்தின் பிரிவு 19, இளம் பருவத்தினர் பாதுகாப்பான மருத்துவ உதவியை நாடுவதற்கு தடையாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
மேலும், "பாலியல் தேர்வு என்பது மனித கண்ணியத்தின் ஒரு பகுதியாகும். இளம் பருவத்தினருக்கு அவர்களின் சொந்த உடலைப் பற்றி தகவலறிந்த தேர்வுகளை எடுக்கும் திறனை மறுப்பது அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21-வது பிரிவுகளின் மீறலாகும்" என்று அவர் தனது வாதத்தில் தெரிவித்திருக்கிறார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications