மத்திய பாஜக அரசுக்கு எதிரான கேரளா வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!
கேரளாவில் ஆளும் இந்தியாவின் ஒரே இடதுசாரி அரசுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு போதுமான நிதி வழங்குவது இல்லை என்பது அம்மாநிலத்தின் குற்றச்சாட்டு. கேரளா மாநில அரசு, திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்க மறுப்பதால் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்பதும் மற்றொரு குற்றச்சாட்டு.
இத்தகைய நிலைமைகளால் அனுமதிக்கப்பட்ட நிதி வரம்புக்குள் வெளியில் கடன் வாங்க கேரள அரசு முயற்சிக்கிறது. இதற்கும் மத்திய பாஜக அரசு அனுமதி தர மறுக்கிறது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கேரளா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இத்தகைய நிலைமைகளால் அனுமதிக்கப்பட்ட நிதி வரம்புக்குள் வெளியில் கேரளா அரசு கடன் வாங்க அம்மாநில அரசு முயற்சிக்கிறது. இதற்கும் மத்திய பாஜக அரசு அனுமதி தர மறுக்கிறது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கேரளா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரூ13,600 கோடி கடன் வாங்க கேரளாவுக்கு அனுமதி தர மத்திய அரசு தயாராக உள்ளது; ஆனால் மத்திய அரசுக்கு எதிரான வழக்கை கேரளா திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை கேரளா மாநில அரசு நிராகரித்தது.
கேரளா அரசின் வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, கேரளா அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், அரசியல் சாசனத்தின் 293-வது பிரிவு இதுவரை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி சார்ந்தது. இதனால் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கேரளாவின் கடன் வாங்க அனுமதி கோரும் கோரிக்கையை இடைக்காலமாக மத்திய அரசு பரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications