டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனம் விரும்பி உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆண்-பெண் விரும்பி உறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விரும்பி உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது - உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: ஆணும், பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பி உடன்பட்டு உடலுறவு வைத்து கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

    மகாராஷ்ட்டிராவில் மணம் முடிக்காமல் டாக்டருடன் இணைந்து வாழ்ந்தபோது, அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக நர்ஸ் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

    SC says that Consensual sex of live in partners not rape

    இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, கடைசியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. இதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆண், பெண் உறவு குறித்து முறையான விளக்கம் அளித்தனர்.

    அப்போது நீதிபதிகள், "ஆணும் பெண்ணும் இருவரும் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டால், பலாத்காரமாகவும் பாலியல் வன்கொடுமையாகவும் கருதப்படக் கூடாது . சில காலமாக இருவருக்கும் இடையே உறவு நீடித்து வந்தாலும் அது பலாத்காரமல்ல. பாலியல் பலாத்காரத்திற்கும், சம்மதத்துடன் கூடிய தாம்பத்திய உடலுறவுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.

    புது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர் புது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர்

    வயது வந்த ஆணும் பெண்ணும், ஒருத்தருக்கொருத்தர் உடன்பட்டு பாலியல் உறவு வைத்து கொள்வது பலாத்காரம் கிடையாது. மேலும் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் பட்சத்தில், கல்யாணம் செய்து கொள்வதாக வாக்கு தருபவர், அதை செய்யத் தவறும்போது அதை பாலியல் பலாத்காரமாக எப்படி கருத முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நர்ஸ் தொடர்ந்த அந்த வழக்கை ரத்து செய்துவிட்டனர்.

    English summary
    Supureme Court Says that Consensual physical relationship between live in partners not rape
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X