தகுதி நீக்கம்.. ஓபிஎஸ் உட்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் கதி என்ன? பிப்.4ல் உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் திமுகவின் மனு மீது வரும் 4-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
2017-ம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவானது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்தது.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவு 11 அதிமுக எம்.எல்.ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
இதன் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் அதிமுகவில் இணைந்தது. இந்நிலையில் அதிமுக கொறடா உத்தரவை மீறி எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கு மீது எந்த விசாரணையும் நடைபெறாமல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இவ்வழக்கு பிப்ரவரி 4-ந் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications