செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு.. முகுலுக்கு பதிலடி கொடுக்கும் துஷார் மேத்தா
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றுடன் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிவடைந்தன.
போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த போது வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணையாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது அவரை அதிகாரிகள் கைது செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்ததை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கில் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி ஆகிய நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தன் மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டும். அமலாக்கத் துறை கைது சட்டவிரோதமானது அல்ல என்றும் தீர்ப்பளித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் வாதம் செய்தனர். இந்த வழக்கு கடந்த 27ஆம் தேதி இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அவர் அமலாக்கத் துறை காவல் துறை அதிகாரிகள் அல்ல.
அவர்கள் அப்படி கருதப்பட்டால் போலீஸ் அதிகாரியின் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும். இது பிஎம்எல்ஏ சட்ட விதிகளுக்கு முரணானது. இதனால் கடும் பிரச்சினைகள் ஏற்படும். குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல் துறையில் ஆஜர்படுத்த மட்டுமே அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை.
அது போல் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணையின் போது கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. பெரா வழக்குகளில் அமலாக்கத் துறை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதில்லை. பிஎம்எல்ஏ சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் காவலை நாடுகிறார்கள். அதுதான் பிரச்சினையாக இருக்கிறது என்றார்.
துஷார் மேத்தா தனது வாதத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அமலாக்கத் துறை இதுவரை 300 பேரை கூட கைது செய்யவல்லை. தவறுதலாக ஒருவரை கைது செய்தால் கூட அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணைக்கு பிறகு கைது செய்ய சட்டப்பிரிவு 19இன் கீழ் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என வாதம் செய்தார்.
அன்றைய தினம் தனது தரப்பு வாதத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாததால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மீண்டும் வாதத்தை தொடர கபில் சிபல் அனுமதி கேட்டார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அந்த வகையில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முகுல் ரோத்தகி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில்வழக்கை இதே அமர்வில் தலைமை நீதிபதி ஒப்புதலுடன் பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவிடப்படும். செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் இன்றுடன் முடிவடைந்தது. நாளை அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுவார்.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications