Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறப்பு அதிகாரம் 142ஐ கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்.. எச்சரிக்கை.. மத்திய அரசுக்கு யூஜிசி வழக்கில் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்து உள்ள புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்காக நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான Article 142-ஐப் பயன்படுத்தியுள்ளது.

UGC (Promotion of Equity) Regulations, 2026 என்ற புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த விதிகள் தெளிவற்றவை என்றும், சமூகப் பிரிவினையைத் தூண்டி தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

UGC regulations

புதிய விதிகள் மீதான விசாரணை முடியும் வரை, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்க கூடாது என்பதற்காக, 2012-ஆம் ஆண்டு விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடந்தது? விரிவான விளக்கத்தை பார்க்கலாம்...

என்ன பிரச்சனை?

பல்கலைக்கழகங்களில் சாதி ரீதியான பாகுபாட்டைத் தடுக்க யுஜிசி 2026-இல் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய விதிமுறைகளை மாற்றி, 2026 ஜனவரியில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (UGC). யுஜிசி 2026 சமத்துவ விதிமுறைகள் எனப்படும் இந்த விதிமுறைகள் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக இந்த விதிமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

புதிய 2026 விதிமுறைகளின்படி, முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பாலின சிறுபான்மையினர் (Gender Minorities) ஆகியோரும் இந்தப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும், இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் பொருந்தும். அதாவது பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம். ஒரு புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை UGC இதை கண்காணிக்கும்.

பொதுப்பிரிவினர் எதிர்ப்பு

இந்த விதிமுறை மாற்றங்கள் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மற்றொருபுறம் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளன. முக்கியமாக பாஜக ஆதரவாளர்கள் இடையிலேயே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் அதிகமாக இருக்கும் பிராமண அமைப்புகள், பிராமண மகா சபா போன்ற இயக்கங்கள் இதை எதிர்த்து உள்ளன. குறிப்பாக, 2012 விதிகளைப் போலவே இப்போதும் பொய் புகார்களுக்கு எதிரான தெளிவான தண்டனைகள் அல்லது பாதுகாப்பு வரம்புகள் வழங்கப்படவில்லை.. இதனால் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படுவர் என்று பாஜக ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.

இந்த புதிய விதிகள் 2012-இல் இருந்த பாதுகாப்புகளைக் குறைப்பதாகவும், மாணவர்களிடையே பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது. சாதியற்ற சமூகத்தை நோக்கிய பயணத்தில் இது ஒரு பின்னடைவு என மனுதாரர்கள் வாதிட்டனர்.

யூஜிசி முடிவிற்கு எதிரான வழக்கும் கோரிக்கையும்

இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி (CJI) மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. யுஜிசி/எதிர்மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், மத்திய அரசு தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் (SG) துஷார் மேத்தா வாதம் வைத்தனர். மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.

மனுதாரர்களின் வாதத்தில், இந்த விதிகள் குழப்பமானவை, இவற்றை ரத்து செய்ய வேண்டும். இது விடுதிகளில் தனித்தனி அறைகளை உருவாக்குவது போன்ற ஆபத்தான சூழலுக்கு வழிவகுக்கும். ஒரு பாதுகாப்புச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும்போது, அதைவிடக் குறைவான பாதுகாப்பு கொண்ட புதிய சட்டத்தைக் கொண்டு வரக்கூடாது, இந்த விதிகள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். இதில் பல குளறுபடிகள் உள்ளன, இதை விட ஒரு சிறந்த வரைவை (Draft) எங்களால் பரிந்துரைக்க முடியும், என்று வாதம் வைத்தனர்.

மத்திய அரசு மற்றும் UGC தரப்பு வாதத்தில், இந்த விதிகள் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கவே கொண்டுவரப்பட்டன. கல்லூரிகளில் பாகுபாட்டைத் தடுக்கவே இவை உதவும். இதற்கு எதிராக தடையுத்தரவு விதிப்பது சரியல்ல இது ஒரு முக்கியமான அரசியலமைப்புச் சட்டப் பிரச்சனை. இதற்கு அரசு விரிவான பதிலை அளிக்கும், அதுவரை சட்டம் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வாதம் வைத்தனர்.

நீதிபதிகள் கூறியது என்ன?

இந்த விதிகளின் சமூகத் தாக்கம் குறித்து நீதிபதிகள் மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தனர்:

நீதிபதிகள் இருவரும், இந்த விதிகளில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. இது மிக மோசமான மற்றும் ஆபத்தான சமூக விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவின் ஒற்றுமை கல்வி நிறுவனங்களில் பிரதிபலிக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது, இது தேச ஒற்றுமைக்கு எதிரானது போல தோன்றுகிறது. புதிய விதிகளில் நிறைய கேள்விகள் உள்ளன. மாணவர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்துவது போல இருக்கிறது , இதைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம், இது எங்கள் எச்சரிக்கை என்று நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

நீதிமன்றத்தின் உத்தரவு

இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:

இடைக்காலத் தடை: 2026-ஆம் ஆண்டு யுஜிசி சமத்துவ விதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

பழைய விதிகள் அமல்: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதால், 2012-ஆம் ஆண்டு விதிகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இதற்காக நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான Article 142-ஐப் பயன்படுத்தியுள்ளது.

மறுசீரமைப்பு: சமூக மாற்றங்களையும், சமூகத்தின் வலிகளையும் உணர்ந்த 2-3 சட்ட நிபுணர்களைக் கொண்டு இந்த விதிகளை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் யோசனை வழங்கியது.

அடுத்த விசாரணை: இந்த வழக்கு 2019-ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள இதே போன்ற ஒரு மனுவுடன் இணைக்கப்பட்டு, மார்ச் 19, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+