அசோக சிங்கங்களுக்கு அவமரியாதை.. பொங்கிய எதிர்க்கட்சிகள்! "அப்படி இல்லீங்க.." சிற்பி விளக்கம்
புதுடெல்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள 9 ஆயிரத்து 500 கிலோ எடைகொண்ட தேசிய நினைவு சின்னத்தை அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக-வினரை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்டிடத்தின் உச்சியில் 9 ஆயிரத்து 300 கிலோ எடையில் வெண்கலத்தால் ஆன தேசிய நினைவுச்சின்னம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவு சின்னத்தை கடந்த 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசோக சக்கரத்துடன் 4 சிங்கங்கள் நிற்பது போன்ற தேசிய சின்னத்தில் பல்வேறு மாறுபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின.

தேவையில்லாத ஆக்ரோஷத்துடன்...
புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி ஜவஹர் சிர்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "நாட்டின் தேசியச் சின்னத்தில் உண்மையான சிங்கங்கள், அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும். ஆனால், தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மோடியின் சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவு இல்லாமல் இருக்கின்றன. ஆகவே இதை உடனே மாற்ற வேண்டும்" எனப்பதிவிட்டு இருந்தார்.

சின்னத்தை மாற்ற வேண்டும்
மேலும், சில எதிர்க்கட்சிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நான்முகசின்னத்தை மாற்ற வேண்டும் என்றும், மாற்றி அமைக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து சிற்பத்தை உருவாக்கிய சிற்பி சுனில் தியோர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "இது சாரநாத்தில் உள்ள தேசியச் சின்னத்தின் மாதிரி வடிவம்தான். 99 சதவீதம் அசோக சின்னத்தை அப்படியே பிரதிபலித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படங்கள் சிற்பத்தின் கீழே இருந்து எடுக்கப்பட்டவை. எனவே, அதனால் அதன் வெளிப்பாடுகள் ஆக்ரோஷமாகவும், வாய் பெரியதாகவும் தோன்றுகிறது.

சிறு மாறுபாடும் இல்லை
ஒரு கலைஞராக நாங்கள் அருங்காட்சியகம் சென்று ஆய்வுகள் மேற்கொண்டோம். அசல் சின்னம் 2.5 அடி உள்ளது. இதை அப்படியே நாங்கள் பெரிதாக வடிவமைத்துள்ளோம். எனவே, அனைத்தும் பெரிதாக தெரிகிறது என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போது காணும் சிற்பம் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் உள்ளது. தொலைவில் இருந்தாலும் அதேபோன்றுதான் காட்சியளிக்கிறது.
நாங்கள் கூறுவது போல, மிக தொலைவில் இருந்தே இதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இதை மனதில் கொண்டே சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்க்கும் இந்த சின்னத்தில் எந்த சிறு மாறுபாடும் இல்லை. எனது பார்வை மட்டத்தில் சின்னத்துடன் பொருந்தும் வகையிலே உள்ளது"என்றார்.

விமர்சனங்களுக்கு பதில்
ஆக்ரோஷம் மிக்க சிங்கமாக திட்டமிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றது பற்றி அவரிடம் கேட்ட போது, " மிகவும் பலம் மிக்க பண்புநலன் கொண்ட சிங்கம் அமைதியை பரப்புகிறது என்பதே இதன் கருத்தாக்கம். ஆக்ரோஷமாக ஒருபோதும் அமைதியை பரப்ப முடியாது" என்றார்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications