அனல் பறந்த 6 மணி நேரம்.. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று 2 வது நாள் விவாதம்
டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான முதல் நாள் விவாதம் அனல் பறந்த நிலையில் இன்று 2வது நாள் விவாதம் நடைபெறுகிறது.
மணிப்பூரில் குக்கி இன பழங்குடி மக்கள் மெய்தி இனத்தவரால் கொடூரமாக கொல்லப்பட்டும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரங்கள் உலக அரங்கையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. குறிப்பாக பெண்களை நிர்வாண ஊர்வலமாக அழைத்து சென்று கும்பல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து பேசாத நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர்.
50 உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் சபாநாயகரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சம்மதம் தெரிவித்தார். நேற்று மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கடுமையாக விமர்சித்த அவர், இதுபற்றி பிரதமர் பேச வலியுறுத்தினார். பாஜக தரப்பில் நிஷிகாந்த் துபே விவாதத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் சவுகதா ராய், டிஆர் பாலு, திருமாவளவன் உட்பட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்தினார்கள்.
குறிப்பாக மணிப்பூர் விவகாரம் மட்டுமின்றி, விலைவாசி உயர்வு, வேலையிழப்பு உட்பட பல்வேறு விவகாரங்களை விவாதத்தின்போது எழுப்பி மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்தனர். நேற்றைய முதல் நாள் விவாதம் மட்டும் சுமார் 6 மணி நேரம் அனல் பறக்க நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மக்களவையில் 2 வது நாள் விவாதம் நடைபெற உள்ளது. இன்றும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும், பாஜக தரப்பிலும் மாறி மாறி விவாதிக்க உள்ளனர். இன்று பிரதமர் மோடி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஆனால், அவர் நாளை பேசுவார் என்றும், அதை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications