நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த மர்ம நபர்.. சுற்றிவளைத்து பிடித்த வீரர்கள்!
டெல்லி: நாடளுமன்ற வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துமீறிய நபரை பாதுகாப்புப்படை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் காலை 6.30 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மர்ம நபர், ரயில் பவன் பக்கத்திலிருந்து சுவரைத் தாண்டி குதித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கருடா வாயிலை அடைந்தார். இதனையடுத்து அவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2023ம் ஆண்டு பார்வையாளர் கேலரியில் இருந்த இரண்டு நபர்கள், அவைக்குள் குதித்து கேனிஸ்டர்களில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியேற்ற செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறியிருக்கும் சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications