பட்ஜெட்டில் ஏழை என்ற பெயர் இரு இடங்களில் வருகிறது.. ஆனால் ஒரு பெயர் ஆறு முறை வருகிறது - ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பட்ஜெட்டில் ஏழை என்ற வார்த்தை இரண்டு இடங்களில் மட்டுமே வருகிறது வேலைவாய்ப்பு என்ற வார்த்தையும் இரண்டு முறை தான் வருகிறது. ஒரு பெயர் 6 இடங்களில் வருகிறது என பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஏழைகளை பட்ஜெட்டில் மத்திய அரசு மறந்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

கொரோனா காலத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்ததாக கடுமையான வாதங்களை முன்வைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சி நாட்டை பிரித்தாள நினைப்பதாகவும், துக்டே துக்டே கும்பல்களின் தலைவனாக காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும் கடுமையாக சாடினார்.

 ப.சிதம்பரம் பதில்

ப.சிதம்பரம் பதில்

இந்நிலையில் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், "கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என அழைக்கப்படும் இங்கு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியலமைப்புச் சட்டப்படி இது ராஜ்யசபா என்று அழைக்கப்படுகிறது காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இல்லாவிட்டால் இது மன்னர் ஆட்சியாக இருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் இந்திய அரசுச் சட்டம் 1909 அப்படித்தான் இருக்கிறது நமக்கு பதிலாக இங்கு மன்னர்கள் தான் இருந்திருப்பார்கள். அலங்கார கிரகங்களும் ஆடம்பர தலைப்பாகை அணிந்தபடி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் புகழ்ந்து பேசி இருப்பார்கள். கடவுளுக்கு நன்றி காங்கிரஸ் நடத்திய சுதந்திரப் போராட்டத்தில் தான் நமக்கு இந்த ராஜ்யசபா கிடைத்தது

கலகத்தால் மாற்றங்கள்

கலகத்தால் மாற்றங்கள்


இந்த பட்ஜெட்டில் நான் ரசித்த சில விஷயங்களை சுருக்கமாக இந்த பேசுகிறேன். மற்ற விஷயங்களை இங்கு இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள். பட்ஜெட்டில் மிகச்சிறந்த விஷயமாக நான் கருதுவது நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டை 90 நிமிடங்களில் முடித்து விட்டார். அதனால் நானும் சுருக்கமாகவே பேசுகிறேன். முதலில் ஒரு விஷயம், எந்த ஒரு மாற்றமோ புதுமையோ எதிலும் குறுக்கிட்டு கலகம் செய்பவர்களால்தான் ஏற்படுகிறது. பிசினஸ், அறிவியல், டெக்னாலஜி என்று ஒவ்வொரு செயலிலும் யாரோ சிலர் குறுக்கிட்டு கலகம் செய்கிறார்கள். அவர்களால்தான் புதுமைகள் படைக்கப்படுகின்றன மாற்றங்கள் நிகழ்கின்றன

இது NDA அரசு

இது NDA அரசு

துக்டே துக்டே கேங் என ஆளும் கட்சி கிண்டல் செய்யும் குழுவில் நானும் உறுப்பினர். கலகம் என்பதன் ஹிந்தி வார்த்தை தான் துக்டே எனக்கு இதில் எந்த கவலையும் இல்லை. இந்த நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. துக்டே துக்டே கேங்கில் யாரெல்லாம் உறுப்பினர்கள் என்று மாண்புமிகு அமைச்சர் பதில் சொன்னார். எங்களிடம் அதுபற்றி டேட்டா இல்லை என்று, இந்த அரசிடம் துக்டே துக்டே கும்பல் பற்றி தகவல் இல்லை. ஆக்சிசன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் இல்லை, நதிகளில் இருந்து சென்ற சடலங்கள் எத்தனை என்பது பற்றி இந்த அரசிடம் டேட்டா இல்லை, எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் துயரத்துடன் நடந்து வீடு திரும்பினார்கள் என்பது பற்றியும் டேட்டா இல்லை. 2022ஆம் ஆண்டில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க வாக்குரிதி தந்தீர்கள் அதை செய்யவில்லை அது பற்றி எந்த டேட்டாவும் இல்லை இது நோட் டேட்டா அவைலபிள் கவர்மெண்ட் அதாவது NDA அரசு.

டாப் 10 பணக்காரர்கள்

டாப் 10 பணக்காரர்கள்

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் நாட்டின் வருமானத்தில் 50 சதவீதத்தை பெறுகிறார்கள். மொத்த சொத்துக்களில் 77% அவர்களிடம் தான் இருக்கிறது. 102 என்ற எண்ணிக்கையில் இருந்து 142 ஆக பில்லியனர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 142 பில்லியனர்களின் சொத்து 23 லட்சம் கோடியில் இருந்து இரண்டு ஆண்டுகளில் 53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது இது தான் இந்தியாவின் நிலை. இந்நிலையில் மக்களுக்காக இந்த பட்ஜெட் என்ன செய்துள்ளது. பெட்ரோல் மானியம் 6 ஆயிரத்து 517 கோடி ரூபாயிலிருந்து, 5,813 கோடியாக குறைக்கப்பட்டது. உர மானியத்தை 1,40,000 கோடியிலிருந்து 1,05,000 கொடியாக குறைத்துவிட்டார்கள் உணவு மானியத்தையும் குறைத்துள்ளனர். மக்கள் நலனை காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

ஏழை என்ற வார்த்தை

ஏழை என்ற வார்த்தை

புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவும் இல்லை மக்கள் நலத் திட்டங்களும் இல்லை. ஆனால் சொத்துக்கள் உருவாக்கப்படுவதாக சொல்கிறீர்கள் நீங்கள் யாருக்கு சொத்துக்களை உருவாக்குகிறீர்கள் அந்த 142 கோடான கோடீஸ்வரர்களுக்கா.. அந்த முதலாளிகளுக்கு சொத்துக்களை உருவாக்கித் தருவதுதான் அரசா?, எல்லோருக்கும் பலன் தராது எனில் இப்படி ஒரு சொத்து உருவாக்கப்படுவதன் அர்த்தம் என்ன? இந்த அரசு ஏழைகளை மறந்துவிட்டது. பட்ஜெட்டில் ஏழை என்ற வார்த்தை இரண்டு இடங்களில் மட்டுமே வருகிறது வேலைவாய்ப்பு என்ற வார்த்தையும் இரண்டு முறை தான் வருகிறது. ஒரு பெயர் 6 இடங்களில் வருகிறது, நிதியமைச்சர் இந்த அரசின் பிரதமருக்கு விசுவாசமாக இருப்பதால் அவர் பெயர் அதிகம் வருவதில் ஆச்சரியம் இல்லை. நீங்கள் ஏழைகளை மறந்துவிட்டீர்கள். ஆனால் ஏழைகள் இதை மறக்க மாட்டார்கள் இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஞாபகசக்தி அதிகம்" எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+