Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி, கவிதா, கெஜ்ரிவால், மஹுவா.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு லாக்! பீதியில் எதிர்க்கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதற்கு இடையே, விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை கதி கலங்க வைத்து இருக்கிறது. செந்தில் பாலாஜி, கெஜ்ரிவால், மஹுவா மொய்த்ரா, கவிதா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

18-வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிகை ஜூன் 04 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் கொதித்துக்கொண்டு இருக்கிறது.

Senthil Balaji Kavitha Kejriwal in Jail Enforcement Directorate storms Opposition Parties

அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி தலைவர்கள் வியூகம் வகுத்து வருகிறார்கள். தேர்தல் களத்தில் அனல் கொதித்துக்கொண்டு இருக்க மறுபக்கம் வழக்கு, விசாரணைகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தலைவலியை கொடுத்து கொண்டு இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் சூழலில் பல முக்கிய தலைவர்களை கம்பிகளுக்கு பின்னால் வைத்துள்ளது அமலாக்கத்துறை... தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மெஹூவா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.. இவர்களின் கதி என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

செந்தில் பாலாஜி:
கரூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் செந்தில் பாலாஜி, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார். மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்த தீர்வுத்துறை என முக்கிய துறைகளை வைத்திருந்த செந்தில் பாலாஜி, திமுக தலைமையின் குட்புக்கில் இடம் பெற்ற அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி, கைது செய்தனர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 24 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு தொடர்ந்து சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜி கைதாகி கிட்டத்தட்ட ஓராண்டாக சிறையில் உள்ளார். ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

கவிதா:
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சி கே. கவிதா. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் இவர். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் இணைந்து இவரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கை கையில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை கடந்த வாரம் கவிதாவை கைது செய்தது.

தற்போது கஸ்டடியில் எடுத்து கவிதாவை விசாரித்து வருகிறது. மதுபான கொள்கைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 100 கோடி பணம் கொடுத்துள்ளார் என அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என கவிதா தெரிவித்துள்ளார். தன் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்றும் பாஜகவை விமர்சித்து வருகிறார் கவிதா.

அரவிந்த் கெஜ்ரிவால்:
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாடாய் படுத்தி வருகிறது மதுபான கொள்கை முறைகேடு வழக்கு. மதுபான கொள்கை வகுத்ததில் ரகசியத்தை முன்கூட்டியே தனியார் நிறுவனங்களுக்கு கசியவிட்டு அதன் மூலம் பெரும் தொகை லஞ்சமாக பெற்றதாகவும் இதில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

கடந்த ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவருக்கு இப்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த சூழலில் அதே வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்து இருக்கிறது அமலாக்கத்துறை.

சிறையால் என்னை நிரந்தரமாக அடைத்து வைக்க முடியாது! இங்கிருந்தே பணியாற்றுவேன்.. அரவிந்த் கெஜ்ரிவால்

மஹூவா மொய்த்ரா:
திரிணாமூல் கங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்தவர் மஹூவா மொய்த்ரா.. நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிச 8 ஆம் தேதி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தினார் என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+