சிறையால் என்னை நிரந்தரமாக அடைத்து வைக்க முடியாது! இங்கிருந்தே பணியாற்றுவேன்.. அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சிறையிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக, அவரது மனைவி சில விஷயங்களை செய்தியாளர்களை சந்தி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். எந்த சிறையும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது.
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறேன், இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மியை பொறுத்த அளவில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்த்து 4 அமைச்சர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். லோக்சபா தேர்தல் நேரத்தில், மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி தங்களை முடக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். வீடு மட்டுமல்லாது அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி போட்டியிட களமிறங்கியுள்ளது. இந்த மாநிலத்திற்கு எம்எல்ஏ குலாப் சிங் யாதவ்தான் பொறுப்பாளர். எனவே இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
என் சர்ச்சை?: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்சியாக சம்மன் அனுப்பப்பட்டு அதன் பின்னர்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications