திடீரென முடங்கிய எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள்.. யுபிஐ பரிவர்த்தனையும் முடங்கியதால் தவித்த கஸ்டமர்ஸ்
டெல்லி: ஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் இன்று காலை முதல் முடங்கியது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். நெட் பேங்கிங், யோனோ ஆப் ஆகியவையும் முடங்கியதால் எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாத நிலை இருந்ததாக வாடிக்கையாளர்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரம் கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. இந்திய வங்கிகளில் அதிகம் வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ உள்ளது. தற்போது பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் இன்று காலை முதல் முடங்கியது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். நெட் பேங்கிங், யோனோ ஆப் ஆகியவையும் முடங்கியதால் எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாத நிலை இருந்ததாக வாடிக்கையாளர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். எஸ்.பி.ஐ வங்கியின் சர்வர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பரிவர்த்தனை மேற்கொள்வதில் பிரச்சினை எழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பண பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை இருப்பதாக ஆதங்கத்துடன் பதிவிட்டு வந்தனர். இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. சில மணி நேரம் கழித்து மீண்டும் எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதையும் காண முடிந்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications