டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமணம் செய்வதாக செக்ஸ் வைத்து கொள்வதும் பலாத்காரம் தான்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் செக்ஸ் வைத்து கொள்வதும் பாலியல் பலாத்காரம் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சத்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி என்னுடன் 2013ம் ஆண்டு பாலியல் உறவு வைத்து கொண்டார்.

அதன் பின்னர் மருத்துவர் எனக்கு கொடுத்த சத்தியத்தை மறந்துவிட்டு, வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

நான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?நான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?

ஐகோர்ட்டில் வழக்கு

ஐகோர்ட்டில் வழக்கு

நிச்சயதார்த்தம் முடிந்த அந்த பெண்ணுடனும் அந்த மருத்துவர் பாலியல் உறவு வைத்துள்ளார். அதனால் என்னை அவர் திருமணம் செய்ய முடியாது என மறுத்து விட்டார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மருத்துவர் மேல்முறையீடு

மருத்துவர் மேல்முறையீடு

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போட உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

பலாத்காரம்

பலாத்காரம்

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் எம் ஆர் சஹா ஆகியோர், "பலாத்காரம் என்பது பெண்ணின் கௌரவத்தையும், மதிப்பையும் சீர்குலைக்கிறது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை, பலாத்கார குற்றவாளி பொருளாதார ரீதியாக காப்பாற்றினாலும், அவர் செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடாது" என்று தெரிவித்தனர்.

7 ஆண்டு சிறை

7 ஆண்டு சிறை

மேலும் திருமணம் செய்வதாக ஏமாற்றி செக்ஸ் வைத்து கொள்வதும் பாலியல் பலாத்காரம் தான் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். எனினும் பலாத்கார குற்றவாளி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Sex on the pretext of marriage amounts to rape, the Supreme Court has ruled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X