மோடியின் பிளான் இதுதான்.. நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்.. சசிதரூர் கூறிய 2 காரணம்.. ஆஹா
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் எம்பி சசிதரூர் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முடிவில் எதிர்க்கட்சிகள் பாகுபாட்டை மறந்து கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளன.

‛இந்தியா' என்ற பெயரில் உருவாகி உள்ள கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. காங்கிரஸ், திமுக உள்பட இந்தியா முழுவதும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. ‛இந்தியா' கூட்டணியை பொறுத்தமட்டில் மாநில வாரியாக தொகுதி பங்கீடு சுமுகமாக நடந்து முடியும் பட்சத்தில் அது பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த பிரதமர் மோடி திட்டம் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை பிரதமர் மோடி முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்பியுமான சசிதரூர் தெரிவித்துள்ளார். மேலும் அதன் பின்னணியில் உள்ள 2 காரணங்களையும் அவர் விவரித்துள்ளார். இதுதொடர்பாக சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பிப்ரவரி மாதம் 14ம் தேதி அபுதாபியில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலை திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு முன்கூட்டியே நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்.
ஏனென்றால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி தான் பொருளாதார வளர்ச்சியை மீட்கும் அவதாரம் என விற்கப்பட்டார். அதன்பிறகு பணப்மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்த நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது புல்வாமாக பயங்கரவாத தாக்குதலை தேர்தலுக்காக பயன்படுத்தி கொண்டனர்.
அதன்படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி கோவில்களை திறந்து நாங்கள் தான் நாட்டின் ‛இந்து ஹிருதய் சாம்ராட் '' என கூற நினைக்கின்றனர். சரி இதுவெல்லாம் இருக்கட்டும். நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு பதில் சொல்லுங்கள். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் தருவதாக கூறியது என்ன ஆனது? சமூக-பொருளாதார ஏற்ற தாழ்வுகளை கடந்து பொருளாதாரம் வளரும் என கூறியது என்னாச்சு? அதோடு ஒவ்வொரு இந்தியரின் பாக்கெட் மற்றும் வங்கி கணக்குகளில் வருமானம் கொட்டும் என கூறிய விஷயத்தில் என்ன நடந்தது?. இதனால் தான் இந்துத்துவா மற்றும் மக்கள் நலன் என்ற அடிப்படையில் நடைபெற உள்ள தேர்தலில் இந்த கேள்விகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டி உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications