Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போராட்டம் என்ற பெயரில் வன்முறை..வங்கத்தில் புழுதி! எனக்கு நீதி வேண்டும்.. மனம் திறந்த ஷேக் ஹசீனா..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேச வன்முறை காரணமாகக் கடந்த வாரம் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்து விட்ட நிலையில், தற்போது முதன்முறையாக மனம் திறந்துள்ளார். தனது மகனின் எக்ஸ் கணக்கு மூலம், அறிக்கை வெளியிட்டுள்ள அவர் தனக்கு நீதி வேண்டும் எனவும், போராட்டம் என்ற பெயரில் வன்முறை நிகழ்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அரண்மனையை நோக்கி வந்த நிலையில் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Bangladesh Sheikh Hasina World

தொடர்ந்து ராணுவ விமான மூலம் டாக்காவில் இருந்து டெல்லி வந்த அவர் தற்போது ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில நாட்களில் அவர் லண்டன் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டின் நிர்வாக பொறுப்பை தான் ஏற்றதாக ராணுவ தளபதி அறிவித்தார். தொடர்ந்து இடைக்கால அரசு அமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டருடன் ஆலோசனை நடத்திய நிலையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கோரிக்கையை தொடர்ந்து பாரிஸீல் இருந்த முகமது யுனிஸ் டாக்கா திரும்பினார். தொடர்ந்து அவரது தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றது.

இந்நிலையில் வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை நிகழ்ந்ததாகவும், தனக்கு நீதி வேண்டுமென முதன்முதலாக மனம் திறந்துள்ளார். தனது மகன் சஜீப் வசாத்தின் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," ஆகஸ்ட் 15, 1975 அன்று, வங்கதேசத்தின் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு.

அதே நேரத்தில் எனது தாய் பேகம் ஃபாசிலதுன்னசா, எனது மூன்று சகோதரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் ஷேக் கமால், சுதந்திரப் போராட்ட வீரர் லெப்டினன்ட் ஷேக் ஜமால், கமல் மற்றும் ஜமாலின் புது மணப்பெண் சுல்தானா கமால் மற்றும் 10 வயதுடைய எனது தம்பி ரோசி ஜமால் ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

எனது ஒரே மாமா சுதந்திரப் போராட்ட வீரர் ஷேக் நாசர், குடியரசுத் தலைவரின் ராணுவச் செயலர் பிரிகேடியர் ஜமில் உதீன், காவல்துறை அதிகாரி சித்திக்கூர் ரஹ்மான் ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஷேக் ஃபஸ்லுல் ஹக் மோனி மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி அர்ஜு மோனி, விவசாய அமைச்சர் சுதந்திரப் போராட்ட வீரர் அப்துர் ரப் சர்னியாபாத், மகன் ஆரிப், 13 வயது மகள் பேபி, 4 வயது பேரன் சுகந்த், சகோதரனின் மகன் சுதந்திரப் போராட்ட வீரர் பத்திரிகையாளர் ஷஹீத் சர்னியாபாத், மருமகன் ரெண்டு மற்றும் பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிர்நீத்த அனைவரின் ஆன்மா சாந்தியடையட்டும், தியாகிகளுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஜூலை மாதம் முதல், போராட்டத்தின் பெயரால் ஆக்கிரமிப்பு, தீவைப்பு, வன்முறை போன்றவற்றால் பல உயிர்கள் பலியாகியுள்ளன.

மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினரும் கூட, பெண் காவலர்கள், ஊடகவியலாளர்கள், கலாச்சாரப் பணியாளர்கள், உழைக்கும் மக்கள், அவாமி லீக் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புத் தலைவர்கள், தொழிலாளர்கள், பாதசாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவர்களது ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

நேசிப்பவரை இழந்த வேதனையுடன் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தக் கொலைகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆகஸ்ட் 15, 1975 அன்று தன்மொண்டி பங்கபந்து பவனில் நடந்த கொலைகளின் நினைவாக இருக்கும் வீட்டை வங்காள மக்களுக்கு அர்ப்பணித்தோம். ஒரு நினைவு அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

இந்த இல்லத்திற்கு நாட்டு சாமானியர்கள் தொடங்கி, நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரமுகர்கள் வந்துள்ளனர். இந்த அருங்காட்சியகம் சுதந்திரத்தின் நினைவுச்சின்னமாகும். துன்பப்படும் வங்காளதேச மக்களின் முகத்தில் புன்னகை பூக்கும் நோக்கத்துடன், எங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பின் நினைவை எங்கள் இதயங்களில் வைத்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அதன் சுப பலன்களையும் பெற ஆரம்பித்து விட்டீர்கள். உலகில் வளரும் நாடு என்ற அந்தஸ்தை வங்காளதேசம் இழந்துள்ளது.

ஆனால் இன்று நாட்டின் மீது புழுதி படிந்துள்ளது. மேலும் எங்கள் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்த நினைவுகள் எரிந்து சாம்பலாகிவிட்டது. தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் சுதந்திர தேசம் என்ற சுயமரியாதையைப் பெற்று, சுய அடையாளத்தைப் பெற்று, சுதந்திர நாட்டைப் பெற்ற தேசத் தந்தை அவமானப்படுத்தப்பட்டுள்ளார். லட்சக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தை அவமதித்தனர். நாட்டு மக்களிடம் இருந்து எனக்கு நீதி வேண்டும்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய துக்க தினத்தை உரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அனுசரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பங்கபந்து பவனில் பூக்கள் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்து அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தி கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் பங்களாதேஷ் மக்களை ஆசீர்வதிப்பாராக." என கூறியுள்ளார். வங்கதேச நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பிறகு ஷேக் ஹசினா முதன்முறையாக இதுதொடர்பாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+