Shibu soren Death: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொர்ந்து முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 4 ஆம் தேதி) நாடாளுமன்றம் மீண்டும் கூடின. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடிய நிலையில், ஷிபு சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 16 மணி நேர விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி அமளியில் ஈடுபட்டன. இதனால் கூட்டத்தின் முதல் வாரம் முழுவதும் இரண்டு அவைகளும் முடங்கின. 2 வது வாரத்தில் ஜூலை 28, 29 ஆம் தேதிகளில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையிலும், ஜூலை 29, 30 ஆம் தேதி மாநிலங்களவையிலும் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் இந்த அமளிகளுக்கு நடுவே நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று (ஆகஸ்ட் 4, திங்கள்கிழமை) கூடின. இதில், தேசிய விளையாட்டுகள் நிர்வாக மசோதா, தேசிய ஊக்க மருந்து சட்டத் திருத்த மசோதா, மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை 6 மாத காலத்துக்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் ஆகிய முக்கியமான மசோதாக்காளை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவையில் எதிர்க்கட்சியினர் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடிய நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications