துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாஜகவில் இணைந்தார்- பீகார் தேர்தலில் போட்டி?
டெல்லி: துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் இன்று பாஜகவில் இணைந்தார். பீகார் சட்டசபை தேர்தலில் ஷ்ரேயாசி சிங் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய்சிங்கின் மகளுமான ஷ்ரேயாசி சிங் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் பூபேந்திர யாதவ் முன்னிலையில் ஷ்ரேயாசி சிங் அக்கட்சியில் இணைந்தார்.

2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். முன்னதாக 2014ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார் ஷ்ரேயாசி சிங்.
தற்போது பாஜகவில் இணைந்துள்ள ஷ்ரேயாசி சிங், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷ்ரேயாசி சிங்கின் தந்தை திக்விஜய்சிங், மத்திய இணை அமைச்சராக பணியாற்றியவர்.
1998-ல் வாஜ்பாய் அமைச்சரவையிலும் திக்விஜய்சிங் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications