லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் வாபஸ்! இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இனி சீராகும்?
டெல்லி: மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டங்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற் போல் சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா என்ற இந்தி பெயரில் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மூன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வாகன விபத்து தொடர்பான சட்டத்திருத்தம், அதாவது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாரி, பஸ், கார் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது போல் டேங்கர் லாரி டிரைவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெட்ரோல் டீசல் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இந்த போராட்டம் குறித்து மத்திய அரசு நிர்வாகி ஒருவர் கூறுகையில் விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்கள் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்தாலோ அல்லது விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தாலே சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றார்.
இதனால் டெல்லி உள்ளிட்ட இடங்களில் 2000 பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்திந்திய வாகன போக்குவரத்து சங்க நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதில் ஓட்டுநர்களுக்கு அதிருப்தி இருக்கும் பட்சத்தில் அதை மத்திய அரசு பரிசீலிக்க தயார் நிலையில் இருக்கிறது என லாரி டிரைவர்களுக்கு மத்திய அரசு உறுதிஅளித்தது.
இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி டிரைவர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். டெல்லியில் இன்று இயல்பு நிலை திரும்பியது. 400 பெட்ரோல் பம்புகளுக்கு பெட்ரோல் டீசல் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அது போல் பெட்ரோல், டீசலின் விலையும் இயல்பு நிலையில் உள்ளது. ஒரு வேளை இந்த போராட்டம் தொடர்ந்திருந்தால் விலையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்க கூடும்.
காய்கறிகளை பொருத்தமட்டில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை விநியோகம் என்பது இயல்பாக இருந்தது. ஆனால் லாரி ஓட்டுநர்களின் ஸ்டிரைக்கால் மகாராஷ்டிரா, கொல்கத்தா, கர்நாடகாவில் இருந்து காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் இன்று காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications