3-வது நாளாக வருமான வரி ஆய்வு.. "இதை செஞ்சிடாதீங்க" ஊழியர்களுக்கு பிபிசியிடம் இருந்து பறந்த உத்தரவு
சர்வதேச ஊடகமான பிபிசி-யின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
டெல்லி: பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நடைபெறும் இந்த சோதனை ஒட்டு மொத்தமாக சுமார் 50 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஊழியர்கள் யாரும் தங்கள் எலக்ட்ரானிக் கருவிகளில் உள்ள எந்த ஒரு டேட்டாவை அழிக்கவோ மறைக்கவோ வேண்டாம் பிபிசி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிபிசி நிறுவனம் அண்மையில் ஒரு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. மோடி மீதான கேள்வி என்ற பெயரில் 2 ஆவணப்படங்களை பிபிசி வெளியிட்டது.
குஜராத் வன்முறையில் அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கு தொடர்பு இருந்ததாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த ஆவணப்படங்களை வெளியிட மத்திய அரசு கடந்த அதிரடியாக தடை விதித்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் இந்த பதிவுகளை அகற்றுவதற்கு யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அரசியல் தலைவர்கள் கண்டனம்
இத்தகைய சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சர்வே எனப்படும் ஆய்வை நடத்தினர். பி.பி.சி. அலுவலகத்தின் நிதி மற்றும் முக்கிய துறைகளின் ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு அதேபோல், நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

2 நாட்கள் விசாரணை
வருமான வரித்துறையின் இந்த சோதனை 3-வது நாளாக தொடர்கிறது. பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நடைபெறும் இந்த சோதனை ஒட்டு மொத்தமாக சுமார் 50 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்று பிபிசி ஊழியர்கள் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அலுவலகத்திற்கு வந்த ஊழியர்களிடம் விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
இதனிடையே, பிபிசி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை கொடுத்துள்ளதாம். அந்த உத்தரவில் , ஊழியர்கள் யாரும் தங்கள் எலக்ட்ரானிக் கருவிகளில் உள்ள எந்த ஒரு டேட்டாவையும் அழிக்கவோ மறைக்கவோ வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாம். அதோடு, விசாரணை அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் பிபிசி தனது ஊழியர்களை கேட்டுக்கொண்டு இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கேள்விக்கும் பதிலளிக்க
அதேபோல், வருமான வரித்துறை அதிகாரிகள் எழுப்பும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் பிபிசி நிறுவனம் மூத்த ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சில அறிவுறுத்தல்களும் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications