50000 பேருக்கு வேலை போகப் போகிறது.. உச்சம் அடையும் "சைலன்ட் லே-ஆப்".. ஐடி ஊழியர்களை துரத்தும் பூதம்
டெல்லி: இந்தியாவின் தொழில்நுட்பத் துறை தற்போது "சைலண்ட் லே - ஆப்" நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 50,000 அல்லது அதற்கும் அதிகமானோர் வேலையிழக்க நேரிடலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், மார்ச் 2026-க்குள் தனது ஊழியர்களில் 2% (சுமார் 12,000 பேர்) பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. ஆனால், இதைப்போல பல பெரிய மற்றும் நடுத்தர தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்காமல், ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு அல்லது வேறு வேலைகளைத் தேடுமாறு மவுனமாக வலியுறுத்தி வருகின்றன.

சைலண்ட் லே - ஆப்
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் "சைலன்ட் லே-ஆப்" அதிக அளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது யாரையும் மொத்தமாக பணி நீக்கமால்.. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவராக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை ஆகும் இது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 50,000 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
2023 மற்றும் 2024 க்கு இடையில் சுமார் 25,000 வேலை இழப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் இரட்டிப்பாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துல்லியமான பணிநீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை.
இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம் என்றாலும், 2023 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமார் 25,000 பேர் வேலையிழந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சைலண்ட் லே ஆப்
சில நிறுவனங்கள் இந்த பணிநீக்கங்களை மிகவும் நுட்பமான முறையில் செயல்படுத்தி வருகின்றன. "சில மாதங்களுக்கு முன்பு, எனது மேலாளர், நான் பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்தார். எனக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் நானே வெளியேறிவிட்டேன். இது ஒருவகையிலான் சைலண்ட் லே ஆப் ஆகும். இந்த ஆண்டு, பெரிய நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பதவிகள் அமைதியாக நீக்கப்பட்டுள்ளன," என்று சமீபத்தில் நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் பேட்டிகளில் குறிப்பிட்டார்.
மூன்று வருட அனுபவமுள்ள ஒரு ஐடி வல்லுநர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். "ஒரு நாள் எச்.ஆர்.அழைத்து, இனி எனக்கு வேலை இல்லை என்று கூறினார்கள். அன்றுதான் எனது கடைசி வேலை நாள் என்றும், உடனே கிளம்பலாம் என்றும் சொன்னார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மூன்று மாத சம்பளத்தை இழப்பீடாகக் கொடுத்து, எனது செயல்திறன் குறைவே காரணம் என்றார்கள்."
ஆக்சென்ச்சர் மற்றும் டிசிஎஸ்
கடந்த ஜூலை முதல், ஆக்சென்ச்சர் மற்றும் டிசிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களும் உலகளவில் மொத்தம் 23,000 பணியிடங்களை குறைப்பதாக அறிவித்துள்ளன. ஆக்சென்ச்சர் தனது வணிக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் $865 மில்லியனை ஒதுக்கி, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உலகளவில் 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
செப்டம்பர் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபடி, டிசிஎஸ் சுமார் 6,000 ஊழியர்கள் அல்லது அதன் பணியாளர்களில் 1% பேர் வெளியேறியதாக அறிவித்தது. இதன் மூலம் மொத்தமாக 19,755 பணியாளர்கள் குறைக்கப்பட்டனர். செப்டம்பர் மாத இறுதியில் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 593,314 ஆக இருந்தது.
டிசிஎஸ் மற்றும் ஆக்சென்ச்சரின் நடவடிக்கைகள் மற்ற நிறுவனங்களையும் இதேபோன்ற நடைமுறைகளை பின்பற்ற தூண்டலாம் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். முக்கியமாக இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் Lay-Off தீவிரமாக நடந்து வருகிறது. அதிக அனுபவம் உள்ள ஊழியர்கள், அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பலர் பணியில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர்












Click it and Unblock the Notifications