தூக்கப்பட்ட பல லட்சம் வாக்காளர்கள்! பீகாரை தூண்டில் மீனாக துள்ள விட்ட SIR! தேர்தலில் யாருக்கு சாதகம்
டெல்லி: கடந்த சில வாரங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பீகாரில் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இது ஒரு பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில் இன்று அங்கு தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்த தேர்தல் முடிவுகளில் SIR பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. 122 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கும் பணி இன்று நடைபெறும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 7.4 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பீகார் SIR
கடந்த சில வாரங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பீகாரில் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது
ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் (MGB) எதிர்க்கட்சிகள், மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்த திருத்தப் பணியில் சுமார் 66.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஜூன் மாதம் 7.89 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, செப்டம்பரில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் 7.42 கோடியாக சரிந்தது. அதிகாரபூர்வ தரவுகளின்படி, 68.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் அல்லது நகல் பெயர்கள் எனப் பெரும்பாலானவை நீக்கப்பட்டன. அதேசமயம், 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த நீக்கங்கள் அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவும், தங்கள் செல்வாக்குமிக்க பகுதிகளில் உள்ள வாக்காளர்களை இலக்காகக் கொண்டதாகவும் புகார் வைத்தது. இந்தத் திருத்தம் ஏழைகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை மறுக்கிறது என்று புகார் வைத்தது.
தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBCs), பிற்படுத்தப்பட்டோர் (OBCs) மற்றும் முஸ்லிம்களின் பெயர்கள் விகிதாச்சாரமின்றி நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர். காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் இந்த நடவடிக்கையை மோசடி என்று விமர்சித்து, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டு (vote chori) செய்ய உதவியதாக குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் புகார்
அதே சமயம் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை ஆதரித்தது. இது தூய்மையான மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான ஒரு வெளிப்படையான செயல்முறை என்று தெரிவித்தது. ஒவ்வொரு நீக்கமும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே செய்யப்பட்டதாகவும், புதிய சேர்க்கைகள் குறிப்பிடத்தக்கவை என்றும் அது கூறியது. ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
தேர்தலுக்கு முன்னதாக இந்த SIR விவகாரம் பெரிய சர்ச்சை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில்தான் பீகார் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது. இதுவரை வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளின்படி பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தமிழ்நாட்டிலும் SIR
பீகார் SIR சர்ச்சையை முடியாத நிலையில் தமிழ்நாட்டிலும் இதே சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக சென்னையில் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்த பணிகளின் முதல் வாரத்தில், கிட்டத்தட்ட 25% வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடமாற்றம், ஆவணங்களை தர முடியாமல் போனது அல்லது மறைவு போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் புதிய முகவரியில் மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராயபுரம் தொகுதியில், நான்கு நாட்களில் சுமார் 27% படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், சுமார் 400 பெயர்கள் நீக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, 1,500 வாக்காளர்களில் சுமார் 400 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "சுமார் 50 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்," என்றார். சண்முகராயன் தெருவில் உள்ள அதிகாரிகள், 700 வாக்காளர்களில் இதுவரை 150 பேரை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது என்று தெரிவித்தனர்.
அதிகாரிகளில் ஒருவர், "நாங்கள் சென்றபோது பலர் வீட்டில் இல்லை. மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிப்போம்," என்றார். மேற்கு ஜாஃபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, 1,409 வாக்காளர்களைச் சரிபார்க்க தங்கள் குழு 492 படிவங்களை விநியோகித்தது என்றார். இன்னொரு பக்கம் SIR-க்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்து உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் SIR தவறான நோக்கம் கொண்டது என்று திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது. தி.மு.க. சார்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார், ஜனநாயகத்திற்கு எதிராக S.I.R. மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications