பெயர் நீக்கவே ‛சார்'.. கருப்பு கோட் அணிந்தபடி.. உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அங்கு ஏன் இந்த பணியை செய்யவில்லை? மேற்கு வங்கத்தில் எதற்காக செய்ய வேண்டி உள்ளது? இந்த விஷயத்தில் மேற்குவங்க மாநிலம் குறி வைக்கப்படுகிறது. ‛சார்' நடவடிக்கை நடத்தப்படுகிறது; பெயர் சேர்க்க அல்ல. இந்த பணியை தான் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து மைக்ரோ அப்சர்வர்ஸ் நியமனம் செய்யப்பட்டு பெயர்கள் நீக்கப்படுகிறது'' என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை வாட்ஸ்ஆப் ஆணையம் என்று கடுமையாக ‛அட்டாக்' செய்தார்.

sir-case-micro-observers-appointed-from-bjp-ruled-states-says-mamata-banerjee-in-supreme-court

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 1 கோடிக்கும் மேலானவர்களிடம் மீண்டும் உரிய ஆவணங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு தொடக்கம் முதலே மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி வழக்கு

அதுமட்டுமின்றி ‛சார்' நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மம்தா பானர்ஜியும் தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் ‛‛2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை வைத்து நடத்தாமல் அதற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை வைத்தே நடத்த வேண்டும்.

தற்போதைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படுகிறது. இதனால் ‛சார்' நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, விபுல் பான்சோலி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மம்தா பானர்ஜி வாதம்

இந்த வழக்கில் மம்தா பானர்ஜியே நேரில் ஆஜராகி வாதம் வைத்தார். மம்தா பானர்ஜி அடிப்படையில் வழக்கறிஞர். கொல்கத்தாவில் உள்ள யோகேஷ் சந்திர சவுத்ரி சட்ட கல்லூரியில் அவர் சட்டம் பயின்றார். பிறகு வழக்கறிஞர் பயிற்சியையும் முடித்தார். அதன்பிறகு தான் அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் தான் வழக்கு விசாரணை தொடங்கியதும் மம்தா பானர்ஜி தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை அவர் கூறினார்.

மே.வங்கம் தான் குறி

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: ‛‛அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அங்கு ஏன் இந்த பணியை செய்யவில்லை? மேற்கு வங்கம் உள்பட பிற மாநிலங்களில் மட்டும் இந்த பணியை செய்ய வேண்டிய தேவை என்ன உள்ளது?.

மேற்கு வங்க மாநில மக்களை நசுக்கும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பணி பார்வையாளர்களிடம் விளக்கம் கேட்காமல் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படுகிறது. மக்கள் வீட்டில் இல்லாதபோது இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. பல வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் மேற்குவங்க மாநிலம் குறி வைக்கப்படுகிறது.

பெயர் நீக்கவே ‛சார்’ நடவடிக்கை

‛சார்' நடவடிக்கை நடத்தப்படுகிறது; பெயர் சேர்க்க அல்ல. இந்த பணியை தான் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து மைக்ரோ அப்சர்வர்ஸ் நியமனம் செய்யப்பட்டு பெயர்கள் நீக்கப்படுகிறது. முதற்கட்டமாக 58 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவர்கள் இறந்தவர்கள் என்று சொல்கின்றனர். இந்த தேர்தல் ஆணையம்.. மன்னிக்கவும் ‛வாட்ஸ்அப்'கமிஷன் இந்த வேலைகளை செய்கிறது. தயவு செய்து மக்களின் வாக்கு உரிமைகளை பாதுகாக்க வேண்டும்'''என்று வாதம் வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+