Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் ஆணையத்தை பலவீனமாக்கிய பாஜக.. SIR விவாதத்தில் 3 கேள்விகளுடன் மத்திய அரசை விளாசிய ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை பலவீனமாக்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி ஏன் பலவீனமடைகிறது, அதன் சுதந்திரத்தை உறுதி செய்யும் வழிமுறைகளை அரசாங்கம் மீட்டெடுக்குமா? பல மாநிலங்களிலிருந்து வரும் புகார்களுக்கு மத்தியில், SIR செயல்முறையின் போது வாக்காளர் பட்டியல்களில் மோசடிகளைத் தடுக்க என்ன பாதுகாப்புகள் உள்ளன? தேர்தல் ஆணையத்தின் நியமனங்களும் முடிவுகளும் அரசியல் நலன்களுடன் பெருகிய முறையில் ஒத்துப்போகின்றன, மேலும் அரசாங்கம் வெளிப்படையான சீர்திருத்தங்களுக்கு உறுதியளிக்குமா? என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் கேள்வி எழுப்பி மத்திய அரசை விளாசினார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. இருப்பினும், கடந்த வாரம் அவை நடவடிக்கைகள் பெரியளவில் நடைபெறவில்லை. பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அவையைத் தொடர்ந்து முடக்கியே வந்தனர். இந்தச் சூழலில் தான் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது.

Rahul Gandhi SIR Parliament

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆன நிலையில், அது தொடர்பான விவாதம் நடைபெற்றது. லோக்சபாவில் பிரதமர் மோடி இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்த நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இதில் உரையாற்றினர். இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் தேர்தல் சீர்திருத்தங்கள், குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) குறித்த விவாதம் லோக்சபாவில் நடைபெற உள்ளது.

இதை எதிர்க்கட்சிகள் பல நாட்களாக வலியுறுத்தி வந்தன. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட இதுவே முக்கிய காரணமாக இருந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த வாரம் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. அதன்படி வந்தே மாதர விவாதத்தைத் தொடர்ந்து சார் பணிகள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ராகுல் காந்தி விவாதத்தைத் தொடங்கி வைப்பார்.. மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் நாளை புதன்கிழமை பதிலளிப்பார்.

டிசம்பர் 1ஆம் தேதி கூட்டம் தொடங்கியதிலிருந்தே தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் SIR மீது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. இது தொடர்பாக முதல் இரண்டு நாட்களில்.. மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தினர். சார் பணிகளுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

சார் பணிகள் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் விளிம்பு நிலை சமூகத்தினரைக் குறிவைத்தே சார் பணிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, SIR மற்றும் "வந்தே மாதரம்" 150வது ஆண்டு விழா குறித்த விவாதங்களில் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படியே இன்றைய தினம் லோக்சபாவில் ராகுல் காந்தி இந்த விவாதத்தைத் தொடங்கினார். ராகுல் காந்தி பேசுகையில், ‛‛மகாத்கா காந்தி கைத்தறிக்கு எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர் ஏன் முழு இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் கைத்தறி என்ற கருத்தைச் சுற்றி வடிவமைத்தார்? ஏன் அவர் கைத்தறியை மட்டுமே அணிந்தார்? ஏனென்றால் கைத்தறி என்பது வெறும் துணி அல்ல. கைத்தறி என்பது இந்திய மக்களின் வெளிப்பாடு. அது உணர்வாக இருந்தது.

மேலும் அது இந்திய மக்களின் உற்பத்தி சக்தியாக இருந்தது. எந்த மாநிலம் சென்றாலும் வெவ்வேறு துணிகளை காண்பீர்கள். ஹிமாச்சலில் தொப்பி,் அசாமில் கோம்சா, பனாரஸில் சேலை, காஞ்சிபுரத்தில் சேலை, நகாலாந்தில் ஜாக்கெட் கிடைக்குமு். இவை அனைத்தும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.

இந்த துணிகள் அழகாக இருக்கின்றன. ஆனால் நீங்கள் சற்று ஆழமாகப் பார்த்தால், அவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான சிறிய நூல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். மேலும் எந்த நூலும் மற்றொரு நூலை விட உயர்ந்தது அல்ல. நூல்கள் ஒரு துணியாக ஒன்றிணைந்தால், அவை உங்களை சூடாக வைத்திருக்கவும், பாதுகாக்கவும் முடியும்.

அதேபோல், நமது தேசமும். நம் நாட்டில் 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். நம் நாடு என்பது 1.4 பில்லியன் மக்காளல் ஆன ஒரு துணி. இந்த துணி வாக்குகளால் ஒன்றாக நெய்யப்படுகிறது. இன்று நான் நிற்கும் இந்த சபை, மக்களவை, மாநிலங்களவை, நாடு முழுவதும் உள்ள சட்டசபை, நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகள், வாக்குரிமை இல்லாவிட்டால் அவை எதுவும் இருக்காது

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் சமம் என்ற கருத்து தான் ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள என் நண்பர்களை தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் நம் நாட்டின் கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு வரும் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட எந்த சமூகத்தை சேர்ந்தவரகளாக இருந்தாலும், எந்த மொழியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சமாமாக பார்க்க வேண்டும் என்ற கருத்தை அவர்களால் பொறத்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் ்டிப்படையி்ல சமத்துவத்தில் நம்ிக்கை கொள்ளவில்லை. அவர்கள் படிநிலையை நம்புகிறார்கள்.

மேலும் பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை பலவீனமாக்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி ஏன் பலவீனமடைகிறது, அதன் சுதந்திரத்தை உறுதி செய்யும் வழிமுறைகளை அரசாங்கம் மீட்டெடுக்குமா? பல மாநிலங்களிலிருந்து வரும் புகார்களுக்கு மத்தியில், SIR செயல்முறையின் போது வாக்காளர் பட்டியல்களில் மோசடிகளைத் தடுக்க என்ன பாதுகாப்புகள் உள்ளன? தேர்தல் ஆணையத்தின் நியமனங்களும் முடிவுகளும் அரசியல் நலன்களுடன் பெருகிய முறையில் ஒத்துப்போகின்றன, மேலும் அரசாங்கம் வெளிப்படையான சீர்திருத்தங்களுக்கு உறுதியளிக்குமா? '' என கேள்வி கேட்டு மத்திய அரசை சாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+