சிபிஎம் பொதுசெயலாளராக மீண்டும் சீதாராம் யெச்சூரி தேர்வு.. 3வது முறையாக பொறுப்பேற்பு!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளராக சீதாராம் யெச்சூரி தொடர்ந்து 3வது முறையாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் கேரளா கண்ணூரில் உள்ள சிஎச் கணாரன் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு நடக்கிறது.
இந்நிலையில் இன்றைய மாநாட்டின்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சீதாராம் யெச்சூரி கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 2 முறை கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்ட சீதாராம் யெச்சூரி தற்போது தொடர்ச்சியாக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள், மத்திய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலைமை குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: சீதாராம் யெச்சூரி(பொதுச்செயலாளர்), பிரகாஷ் காரத், பினராயி விஜயன், கொடியேரி பாலகிருஷ்ணன், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், முகமது சலீம், பி.வி.ராகவலு, சூர்ய காந்த் மிஸ்ரா, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்ஏ பேபி, ஜி ராமகிருஷ்ணன், சுபாஷினி அலி, ராமச்சந்திர தோம், அசோக் தவாலே, ஏ.விஜயராகவன் ஆகியோர் உள்ளனர்.
இந்த மாநாட்டில் நேற்று சிறப்பு விருந்தினராக முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார். என்ட பெயர் ஸ்டலாின் என மலையாள மொழியில் பேசி அசத்தினார். இந்த மாநாட்டின்போது மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் பேசினார். மாநில அரசுகளை மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் மாநில அரசுகளின் உரிமைகளை ஒருபோதும் மத்திய அரசிடம் விட்டு தரமாட்டோம் என ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications