டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் சிவசங்கரன் வெளிநாடு தப்பியது எப்படி? வெளியான திடுக் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.600 கோடி வங்கி மோசடியில் இருந்த சிவசங்கரன் வெளிநாடு தப்பியது எப்படி?

    டெல்லி: ரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் தொடர்புடைய சிவசங்கரன், லுக்அவுட் நோட்டீசை மீறி வெளிநாடு செல்ல சிபிஐ உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுகுறித்து இந்தியா டுடே செய்தி சேனல் ஒரு அதிர்ச்சிகர செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த, சிபிஐ அதிகாரி ஒருவர் லுக்அவுட் நோட்டீஸ் விதிமீறல் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும், ஆனால், அதை மீறி, சிவசங்கரன் வெளிநாடு தப்பிச் செல்ல உதவப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மத்திய கண்காணிப்பு கமிட்டி பரிந்துரைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் மாதம், ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் மற்றும் 3 நிறுவனங்களுக்குக எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ரூ.600 கோடி வங்கி மோசடி தொடர்பாக, ஏர்செல் சன்ஷைன் லிமிட்டட் (பிரிட்டீஷ் விர்ஜின் ஐஸ்லேன்ட்ஸ்) மற்றும் வின் வின்ட் ஓஒய் (ஃபின்லேன்ட்) மற்றும் 15 ஐடிபிஐ வங்கி அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது சிபிஐ.

    சிபிஐயிடம் புகார் இல்லை

    சிபிஐயிடம் புகார் இல்லை

    சிபிஐ அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், "ஐடிபிஐ வங்கி உயர் அதிகாரிகள் உதவியோடுதான் ரூ.600 கோடி மோசடி நடந்துள்ளது. வங்கி சார்பில் சிபிஐயிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கவில்லை" என்றார்.

    தப்புவிக்கும் முயற்சி

    தப்புவிக்கும் முயற்சி

    சிவசங்கரனை தப்புவிக்கும் முயற்சிகள் ஆகஸ்ட் மாதமே துவங்கிவிட்டதாம். பெங்களூரிலுள்ள வங்கிகள் பாதுகாப்பு மற்றும் மோசடி பிரிவிலிருந்து (பிஎஸ்எப்சி) டெல்லியிலுள்ள ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.

    விசாரணை

    விசாரணை

    2018 ஆகஸ்ட் 16ம் தேதி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, பெங்களூரிலிருந்து இந்த வழக்கு, சிபிஐ டிஐஜி மணிஷ் குமார் சின்ஹாவிற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி அதாவது வழக்கு மாற்றப்படும் 4 நாட்கள் முன்பாக, சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

    வெளிநாடு

    வெளிநாடு

    சிபிஐயை செப்டம்பர் 3ம் தேதி அணுகிய சிவசங்கரன், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். ஆனால் இதை ஏற்று லுக்அவுட் நோட்டீசை தளர்த்தினால் சிவசங்கரன் வெளிநாடுக்கே தப்பியோடிவிடுவும் வாய்ப்பு உள்ளது என்று சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

    சிபிஐக்கு வழக்கு

    சிபிஐக்கு வழக்கு

    ஆனால் வர்மாவின் அறிவுறுத்தலை மீறி, குடியுரிமை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு மூலமாக, லுக்அவுட் நோட்டீஸ் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால்தான் அவர் தப்பியோடிவிட்டார். சிபிஐ இயக்குநர் பரிந்துரையை மீறி, எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? அவருக்கு இது தெரியுமா? பெங்களூரிலிருந்து சிபிஐக்கு இந்த வழக்கு ஏன் மாற்றப்பட்டது என்ற கேள்விகள் எஞ்சி நிற்கின்றன.

    தெரிந்தே மோசடி

    தெரிந்தே மோசடி

    2010ம் ஆண்டு ஐடிபிஐ வங்கி வின் வின்ட் ஓஒய்க்கு ரூ.322 கோடியை கடனாக வழங்கியது. 2013ல் அந்த நிறுவனம் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியதால், இந்த கடன் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இது தெரிந்திருந்தும் கூட ஐடிபிஐ வங்கி ஆக்செல் சன்ஷைன் லிமிட்டடுக்கு 2014ல் ரூ.523 கோடியை கடனாக வழங்கியுள்ளது. சிவா குரூப்பை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கும், வின் வின்ட் ஓஒய் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது தெரிந்தும் இது நடந்துள்ளது.

    English summary
    In what seems to be repetition of Vijay Mallya's case in which he fled country after defrauding Indian banks after his LoC was diluted, the Look-out-Circular against C Sivasankaran, accuses of defrauding IDBI bank to the tune of Rs 600 crore, was diluted by the CBI helping him to flee the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X