அலுங்காம குலுங்காம.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. 24 பெட்டிகளுடன் ரெடியாகிறது: அமைச்சர் தந்த உறுதி
டெல்லி: ஸ்லீப்பர் எனப்படும், தூங்கும் வசதியுடைய, வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணியில், ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள இந்த தகவலானது, ரயில் பயணிகளிடையே மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
நாட்டின் பல்வேறு நகரங்ளுக்கு இடையே, 100க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன... வேகமாகவும், களைப்பின்றியும், பயணியர் உட்கார்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள், மணிக்கு 120 கி.மீ., வேகத்துக்கு மேல் பயணிக்கின்றன.

எனவே, பயணிகளிடம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸூக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இந்த ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க, ரஷ்யாவின் மாஸ்கோவை தலைமையிடமாக வைத்து செயல்படும், டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் என்ற ரயில் போக்குவரத்து நிறுவனத்துடன், இந்தியன் ரயில்வே துறை ஒப்பந்தமும் போட்டிருக்கிறது.
ஸ்லீப்பர் ரயில்: எனவே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலானது விரைவில் அதன் வணிக பயணத்தை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. இந்த ஸ்லீப்பர் ரயில் BEML-லிருந்து இன்ட்டகிரல் கோச் ஃபேக்ட்ரிக்கு (ICF) விரைவில் சென்றடைய உள்ளதாகவும், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் முதல் கமர்ஷியல் ரன் தொடங்கப்படும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் USB சார்ஜிங், யூனிஃபைட் ரீடிங் லைட், விஷுவல் இன்பர்மேஷன் சிஸ்டம், இன்சைட் டிஸ்பிளே பேனல், செக்யூரிட்டி கேமராக்கள் மற்றும் மாடுலர் பேன்ட்ரி போன்ற அனைத்து நவீன வசதிகளும் இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி பயணிகளுக்கு, குளிக்க வெந்நீர் கிடைப்பதை ரயில்வே உறுதி செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியதால், பயணிகளிடம் ஸ்லீப்பர் ரயிலுக்கான எதிர்பார்ப்பு கூடி வருகிறது.
பணிகள் தாமதம்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் கட்டணம், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போலவே இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே உறுதி கூறியிருந்த நிலையில், வடிவமைப்பு அனுமதி கிடைக்காததால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பில் தாமதம் நீடிப்பதாக திடீர் செய்திகள் சமீபத்தில் மீடியாக்களில் வெளியாகியிருந்தன.
அதாவது, ஸ்லீப்பர் ரயிலில் கழிப்பறை, கேன்டீன் அமைக்க, டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்திடம் ரயில்வே அமைச்சகம் கோரியதாகவும், இதனால், தயாரிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் செய்திகள் பரபரத்தன..
ரயில் பெட்டிகள்: ஆனால், இந்த தகவல்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.. இதுகுறித்து அமைச்சர் சொல்லும்போது, "6 அல்லது 8 பெட்டிகளுக்கு மேல் உள்ள ரயில் பெட்டியை தயாரிப்பதில், டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்துக்கு அனுபவம் இல்லை. ரஷ்யாவில் குறைந்த மக்கள் தொகை இருப்பதால், அங்கு 6 அல்லது 8 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய நாட்டில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால், 16 அல்லது 24 பெட்டிகள் கொண்ட ரயில் தேவை.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பு மாதிரியை நாங்கள் தருகிறோம் என்றும், அதன்படி ரயில் பெட்டியை தயாரிக்க வேண்டும் என்றும், டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்திடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும், 16 அல்லது 20 அல்லது 24 என்ற எண்ணிக்கையில் ரயில் பெட்டிகளை தயாரிக்க வேண்டும் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் உறுதி: இந்த விவகாரத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்துமே தவறு. ரயில் பெட்டி தயாரிப்பு பணிகளை, டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனம் விரைவில் துவங்க உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர்.
இதனிடையே, எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 8ல் இருந்து 16 ஆக உயர்த்த மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றும் இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதாக பயணம் செய்ய முடியும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications