Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலிபான்கள் ரொம்ப மோசம்! இரவில் தூக்கமின்றி தவிப்போம்! ஆப்கானிஸ்தான் பற்றி விவரித்த சீக்கிய பெண்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்கானிஸ்தானில் ‛‛சீக்கியர் இந்து குடும்பங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றன. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது 10 முறை யோசிப்போம்'' என தாலிபான்கள் ஆட்சி குறித்து இந்தியா திரும்பிய சீக்கிய பெண் ஒருவர் விவரித்துள்ளார்.

அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரில் வெற்றி பெற்ற தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. 2021 ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் உள்ளது.

தாலிபான்கள் ஆட்சியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் தான் தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் செல்லும்போதே ஏராளமான மக்கள் கொத்துகொத்தாக அவசரமாக நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

வாட்டும் பசி, பட்டினி

வாட்டும் பசி, பட்டினி

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஓராண்டு ஆகும் நிலையில் அங்கும் இன்னும் நிலைமை சரியாகவில்லை. நாட்டில் பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில் சமீப காலமாக குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

இதற்கு மத்தியில் தான் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புர்கா அணிய வேண்டும். வேலைகளுக்கு செல்லக்கூடாது. டூவீலர் ஓட்டக்கூடாது. ஓட்டலில் ஆண், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பன உள்பட ஏராளாமான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதனை உலக நாடுகள் கண்டித்தாலும் கூட தாலிபான்கள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விதவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்தியா வந்த சீக்கிய பெண்

இந்தியா வந்த சீக்கிய பெண்

இதனால் அங்குள்ள பிற நாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தாலிபான்கள் ஆட்சிக்கு பயந்து காபூலில் உள்ள வீட்டை விட்டு சீக்கியரான 2 குழந்தைகளின் தாயான மன்பிரீத் கவுர் இந்தியா வந்துள்ளார். ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் உதவியுடன் 28 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் அடங்கிய குழுவினர் இந்தியா வந்ததில் ஒருவர் தான் இந்த மன்பிரதீன் கவுர். இவர் ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் பற்றிய பேசியுள்ளார். இவர் கூறியுள்ளதாவது:

தூக்கமில்லா இரவுகள்

தூக்கமில்லா இரவுகள்

ஆப்கானிஸ்தானில் நாங்கள் சிறுபான்மையின மக்களாக இருக்கிறோம். இதனால் ஒருவித அச்சம் எப்போதும் இருந்தது. இதனால் காபூலில் உள்ள சீக்கியர் மற்றும் இந்து குடும்பங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு இல்லை. குருத்வாரா கார்டே பர்வான் மீது ஜூன் 18ல் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

10 முறை யோசிப்போம்

10 முறை யோசிப்போம்

எங்கள் குழந்தைகளுக்கு வெளியுலகம் தெரியாத நிலை உருவானது. பெரும்பாலும் வீட்டிலேயே இருப்போம். அத்தியாவசியத்துக்காக மட்டுமே வெளியே செல்வோம். நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முன்பு 10 முறை யோசிப்போம். அதன்பிறகு முகத்தை மூடிக்கொண்டு வெளியே சென்று வருவோம்.

 கல்வி கற்கும் வசதி இல்லை

கல்வி கற்கும் வசதி இல்லை

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு கல்வி கற்கும் வசதி இல்லை. ஏனென்றால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது என்பது அவர்களின் உயிரை பணயம் வைப்பதாகும். இதனால் கல்வி என்பது குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. யாராவது படிக்க வேண்டும் என்றால் அவர்கள் இந்தியாவுக்கு தான் வருகிறார்கள்'' என்றார்.

ஜூன் 18 ல் நடந்தது என்ன?

ஜூன் 18 ல் நடந்தது என்ன?

முன்னதாக ஜூன் மாதம் 18 ம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் புகழ்பெற்ற கார்டே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஒரு சீக்கியர் உள்பட 2 பேர் கொல்லப்பட்ட நிலையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் வரை பலியாகினர். இதையடுத்து அங்கு வசித்து வரும் சீக்கியர்கள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தான் இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+