போலி சான்றிதழ்’ ஐஏஎஸ் அதிகாரிகள் இத்தனை பேரா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் போலி சான்றிதழ் கொடுத்து ஏராளமான பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி வகிப்பதாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சி தரும் பட்டியல் வலம் வருகிறது. பூஜா கேத்கர் என்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் போலி சான்றிதழ்கள் விவகாரம் ஓய்வதற்குள் அடுத்தடுத்து ஏராளமானோர் இப்படி முறைகேடாக போலி சான்றிதழ்கள் கொடுத்து ஐஏஎஸ் அதிகாரிகளாக்கப்பட்டிருப்பதால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக கடும் கொந்தளிப்பு உருவாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் புனே மாவட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்துமீறி செய்த அலப்பறைகள்தான் இத்தனை முறைகேடுகளும் அம்பலமாகக் காரணம். ஆண்டு வருமானம் ரூ8 லட்சம் என பொய்யான சான்றிதழ் கொடுத்தது; தாம் ஒரு மாற்றுத் திறனாளி என போலி சான்றிதழ்களை கொடுத்துவிட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு டிமிக்கி கொடுத்தது என பூஜா கேத்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் வரிசை கட்டுகின்றன.

ias upsc

இந்த வரிசையில்தான் சமூக வலைதளங்களில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் போலி சான்றிதழ் கொடுத்த விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. 2010-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங் தமக்கு உடல் குறைபாடுகள் இருப்பதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆனால் அபிஷேக் சிங்கின் சமூக வலைதளங்களில் அவர் குறிப்பிட்ட உடல் குறைபாடுடையவர்கள் செய்யவே முடியாத செயல்களில் ஈடுபடும் போட்டோக்கள் அவரை காட்டிக் கொடுத்துவிட்டன.

2020-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான ஆசிப் யூசுப், முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டில் தேர்வானவர். ஆனால் அவர் தந்த சான்றிதழ் என்கிறது சமூக வலைதள ஆய்வுகள்.

2021-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான பிரியன்ஹூ காதி... இவரும் எலும்பியல் குறைபாடு உள்ளிட்டவை இருப்பதாக போலி சான்றிதழ் கொடுத்தவராம். இதுவரை அவரை சந்தித்த யாரும் அவர் குறிப்பிடும் எந்த ஒரு உடல் குறைபாடுமே இல்லாதவர் என்கின்றனராம்.

2021-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியானவர் அனு பெனிவால். இவரது தந்தையும் ஐபிஎஸ் அதிகாரிதான். ஆனால் முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகைக்காக போலி வருமான சான்றிதழ் கொடுத்திருக்கிறாராம்.

2014-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி நிகிதா கண்டேல்வால் தமக்கு பார்வை குறைபாடு என சான்றிதழ் கொடுத்திருக்கிறார். ஆனால் கண்ணாடி கூட அணியாமல்தான் வலம் வருகிறாராம். கார் ஓட்டுகிறாராம். இத்தகைய சமூக வலைதள தகவல்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சிக்கு எதிரான கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+