சாப்ட்வேர் செய்த தவறு.. தானாக இன்ஜினை நிறுத்திய மென்பொருள்? ஏர்இந்தியா விபத்திற்கு இதுதான் காரணம்?
டெல்லி: அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பாக புதிய கோணம் ஒன்றை அமெரிக்க வல்லுநர் முன் வைத்து உள்ளார். இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் முற்றிலும் புதிய கோணம் ஒன்றை அவர் முன் வைத்துள்ளார்.
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் மத்தியில், அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலும், விமானப் போக்குவரத்து வழக்கறிஞருமான மேரி ஷியாவோ இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த போயிங் 787 விமானத்தில் சாப்ட்வேர் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம், சாப்ட்வேர் பிரச்சனை காரணமாக போதிய Lift.. அதாவது உயர்ந்து செல்லும் விசை கிடைக்காமல் போய் இருக்கலாம் என்று கூறி உள்ளார்.
AI 171 விபத்திற்கு மென்பொருள் செயலிழப்பு காரணமாக ?
அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலும், தற்போது Motley Rice நிறுவனத்தில் விமானப் போக்குவரத்து வழக்கறிஞருமான மேரி ஷியாவோ, ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதற்கான காரணம் சாப்ட்வேர்தான் என்று அடித்து கூறி உள்ளார். போயிங் விமானங்களில் பலவற்றில் சாப்ட்வேர் பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றுள்ளார்.
கடந்த மே மாதம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர். ஷியாவோவின் இதுகுறித்து கூறுகையில், விமானத்தில் இரண்டு என்ஜின்களும் பழுதாகி இருக்கலாம், இது மென்பொருள் தோல்வியால் ஏற்பட்டு இருக்கலாம்.. இந்த செயலிழப்பு முன்பு இதே போன்ற போயிங் 787 விமானங்களில் நடந்துள்ளது. மென்பொருள் தோல்வியால் எஞ்சின் தோல்வி அடைந்து விமானம் போதிய லிப்டை பெற்று இருக்காது.
குறிப்பாக, போயிங் 787 இல் உள்ள பாதுகாப்பு அமைப்பான த்ரஸ்ட் கண்ட்ரோல் மால்ஃபங்க்ஷன் அக்காமடேஷன் (TCMA)- தோல்வி அடைந்து இருக்கலாம். டிஜிட்டல் எஞ்சின் கட்டுப்பாட்டின் (FADEC) மூலம் மேலே குறிப்பிடப்பட்ட மென்பொருள்தான் எஞ்சின் செயல்திறனைக் மொத்தமாக கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கணினி அடிப்படையிலான அமைப்பு, விமானம் தரையில் இருப்பதாக தவறாக உணர்ந்தால், விமானியின் தலையீடு இல்லாமலே தானாகவே எஞ்சின் வேகத்தை, லிப்டை குறைத்து இருக்கலாம். விமானம் கீழே இருப்பதாக நினைத்துக்கொண்டு.. எஞ்சினை இந்த மென்பொருள் அணைத்து இருக்கலாம். நடுவானில் இப்படி நடந்ததால் விமானம் கீழே பொத்தென்று விழுந்து இருக்கலாம் என்று அவர் கூறி உள்ளார்.
பிளாக் பாக்ஸ்
அகமதாபாத்தில் ஜூன் 12 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து புலனாய்வாளர் குழு உதவி செய்ய முன்வந்த நிலையில், அதனை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் முழுமையாக திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பிளாக் பாக்ஸை ஆய்வு செய்வது இத்தனை நாட்கள் இயலாத காரியமாக இருந்தது. கருப்பு பெட்டியில் ஏற்பட்ட சேதம் காரணமாக அதை சோதனை செய்வது கடினமாக இருந்தது. இந்த கருப்பு பெட்டி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், விரைவில் விபத்துக்கான காரணம் தொடர்பான முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications