100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய சூரிய கிரகணம் 2025! இன்று என்ன செய்யலாம்? இந்தியாவில் தெரியுமா?
டெல்லி: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு சூரிய கிரகணங்கள் ஏற்படும். இன்று நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரகணம் இதுவாகும். இது ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியும். சூரியன், பூமி, நிலவு ஆகியவை சுற்றி வரும் போது அதன் இருப்பிடத்திற்கேற்ப சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனின் ஒளி பூமியில் படாதவாறு நிலவின் ஒளி மறைத்துக் கொள்வதுதான் சூரிய கிரகணம் ஆகும். இதனால் சூரியனின் கதிர்கள் பூமி மீது சில நிமிடங்களுக்கு படாமல் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.
இது இந்திய நேரப்படி மதியம் சரியாக 2.20 மணி முதல் மாலை 6.13 மணி வரை நீடிக்கிறது. மாலை 4.17 மணிக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த கிரகணம் 3 மணி நேரம் 53 நிமிடங்களுக்கு நீடிக்கும். ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும்.
அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது அதிகாலை நிகழ்கிறது என்பதால் இதன் தாக்கம் தெரியாது. கிரகணத்தின் போது தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இது கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் ஏற்படாமல் தடுக்கும்.
கிரகணத்திற்கு பிறகு அவற்றை உட்கொள்ளலாம். இந்த நேரத்தில் கடவுள் வழிபாட்டில் அதிக நேரத்தை செலவிடுங்கள். வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்க வேண்டும். கோயில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
கிரகணத்தின் போது எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக் கூடாது. பயணங்கள் செய்யக் கூடாது. உணவு சமைப்பதோ காய்கறிகளை நறுக்குவதோ, வேலை செய்யவோ உணவு உண்ணவோ கூடாது. கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கூர்மையான பொருட்களை பயன்படுத்தவே கூடாது.
கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை செய்வது போன்றவற்றை செய்யவே கூடாது. இந்த கிரகணம் இந்தியாவில் காண முடியாது என்கிறார்கள். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தை காண வேண்டுமானால் டிவியில் பார்க்கலாம்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications