"எனது புகழை கெடுக்க சிலர் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துள்ளனர்" பிரதமர் மோடி அட்டாக்!
டெல்லி: கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சிலர் வேலைசெய்து கொண்டு இருக்கின்றனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறிப்பிட்ட பல்வேறு நபர்களுடன் இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளனர். தொடர்ந்து மோடியின் புகழை களங்கப்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை விரிவு படுத்தப்பட்டு வருகிறது.
சொகுசான வசதிகள், அதிவேகம் என பயணிகளுக்கு சவுகரியம் அளிக்கும் பல சலுகைகள் இந்த ரயிலில் உள்ளன. பயணிகள் மத்தியிலும் வந்தே பாரத் ரயில் சேவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளை சாடிய மோடி
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- நிகழ்ச்சியில் பேசும்போது, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சிலர் வேலைசெய்து கொண்டு இருக்கின்றனர்.

மோடியின் புகழை களங்கப்படுத்த
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறிப்பிட்ட சிலருடன் இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளனர். தொடர்ந்து மோடியின் புகழை களங்கப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் மோடியின் பாதுகாப்பு கவசமாக ஏழைகள், நடுத்தர மக்கள், பழங்குடியினர், தலித்துகள் பிற்படுத்தப்பட்டவர்கள் என ஒவ்வொரு இந்தியரும் உள்ளனர். முந்தைய அரசுகள் திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே மும்முரமாக இருந்தது.

முதலிடத்திற்கு கொண்டுவர
அந்த அரசுகள் ஒரு குடும்பத்தை நாட்டின் முதல் குடும்பமாக கருதியது. ஏழை எளிய மக்களை புறக்கணித்தது. ரயில்வேயும் இதற்கும் உதாரணமாக உள்ளது. ரயில்வே துறை மேம்படுத்த வேண்டும் என்று முந்தைய அரசுகள் விரும்பியிருந்தால் செய்து இருக்க முடியும். ஆனால் பாஜக ஆட்சி அமைத்த பிறகே ரயில்வேயின் நவீனமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உலக அளவில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

தூய்மைக்கு முக்கியத்துவம்
அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்ட்டில் கூட இது பிரதிபலித்தது. ரயில்பாதைகள் மின் மயமாக்குவது ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா, வைஃபை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன மாயமாக்கும் வசதிகள் மேம்படுத்தப் படுகின்றன. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புகார்களுக்கும் உரிய நேரத்தில் தீர்வு காண்பதில் கவனம் காட்டப்படுகிறது. ரயில்வே துறையில் மக்களுக்கு பயண வசதியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications