முதலில் வீடியோ கான்பரன்ஸ்.. அடுத்தது டெல்லியில் டின்னர்- சோனியா வியூகத்தின் பின்னணியில் சி.பி.எம்.
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி படுதீவிரமாக உள்ளார். சோனியா காந்தியின் இந்த தீவிர முயற்சிகளின் பின்னணியில் மூத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
2024 லோக்சபா தேர்தலை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் எதிர்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் முன்வைத்து வருகின்றனர். இதற்கு முன்னோட்டமாக பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம், விவசாய சட்டங்கள் ஆகியவற்றில் 15 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. அதேபோல் ஓபிசி பட்டியலில் ஜாதிகளை சேர்க்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்திருந்தன.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை
டெல்லியில் இன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தி தலைமையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தின. இந்த நிலையில் வரும் 20-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சோனியா காந்தி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

டெல்லியில் விருந்து
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோரை அழைத்துள்ளார் சோனியா. இந்த ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து விருந்து அளிக்கவும் சோனியா திட்டமிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே பங்கேற்பு
இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளன. வரும் 20-ந் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆன்லைனில் உரையாடுகிறார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் என்றார்.

கபில் சிபல் விருந்து
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவரான கபில் சிபல் டெல்லியில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகியவற்றின் தலைவர்களும் இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் தேவை என வலியுறுத்திய 23 அதிருப்தித் தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸில் மட்டும் அல்லாது எதிர்க்கட்சிகளிடமும் கருத்தை உருவாக்க கபில் சிபல் முயற்சிக்கிறார் என்பதுதான். அதற்குத்தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தார் எனவும் கூறப்படுகிறது.

சிபிஎம் பின்னணி
ஆனால் காங்கிரஸ் மேலிடமோ, அதிருப்தி தலைவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் அத்தனை பேரையும் சிந்தாமல் சிதறாமல் ஓரணிக்கு கொண்டு வருவதில்தான் படுதீவிரமாக இருக்கிறது. சோனியா காந்தியின் இந்த நகர்வுகளுக்குப் பின்னால் மூத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள். இது குறித்து மூத்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சோனியா இப்படியான ஒருங்கிணைப்பை மேற்கொள்வது வலிமையான எதிர்க்கட்சிகள் அணி உருவாகப் போகிறது என்பதற்கான சமிக்ஞை. அத்தனை எதிர்க்கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருக்கிறது. காங்கிரஸ் தலைமைதான் இதனை முன்னெடுக்க முடியும். இடதுசாரிகளால்தான் ஒருங்கிணைக்கவும் முடியும் என்கின்றனர்.

கட்சிகள் நிலவரம் என்ன?
தற்போதைய நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை எதிர்க்கட்சிகள் அணியில் இணையவில்லை. ஒய்.எஸ். ஆர் காங்கிரஸும் பிஜூ ஜனதா தளமும் ஆந்திரா, ஒடிஷாவில் ஆட்சியில் இருக்கின்றன. அதனால் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை விரும்பக் கூடியவை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியைப் பொறுத்தவரையில் அவர் எந்தப் பக்கம் சாய்வார்? என்பது தெரியாது. வடகிழக்கு மாநிலங்களில் இருக்கிற பெரும்பாலான கட்சிகள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதும் கள யதார்த்தமாகும்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications