தொடர்ந்து சர்ச்சை.. நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த மத்திய அரசு திட்டம்? பரபர பின்னணி
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இந்த ஆண்டு ஏற்பட்டன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என அடுத்தடுத்த சர்ச்சை வெடித்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இத்தகைய சூழலில், நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு சேர நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு தமிழகம் துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது. அதேபோல கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், கருணை மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.
இதையடுத்து மறு தேர்வு நடத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல் வினாத் தாள் விற்பனை, தேர்வை பார்த்து எழுத லஞ்சம் உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. இதனால், தேசிய தேர்வு முகமைக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீட் சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐயும் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
தொடர் சர்ச்சைகளுக்கு இடையே முதுகலை நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்க மத்திய அரசு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நீட் தேர்வை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நீட் தேர்வு ஒ.எம்.ஆர் ஷீட் மூலம் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் பேனா மூலமாக விடைகளை குறிப்பிட வேண்டும்.
ஏற்கனவே ஜேஇஇ மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆகிய தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனையின் போது, நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications