இஞ்சியே சாப்பிட மாட்டோம்! நவராத்திரியால் டெல்லியில் 10 நாட்கள் அசைவ கடைகள் மூடல்! மேயர் சொன்ன காரணம்
டெல்லி: நவராத்திரியை முன்னிட்டு தெற்கு டெல்லி முழுக்க மாமிச கடைகளை மூடுவதற்கு மேயர் முகேஷ் சூர்யன் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் ஒருவர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லியில் இதுவே முதல்முறையாகும்.
நாடு முழுக்க தற்போது ஹலால் உணவு பிரச்சனையும் மாட்டுக்கறி பிரச்சனையும் தலை தூக்க தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் ஹலால் உணவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முன்பு மாட்டுக்கறி சாப்பிடுவது மட்டுமே பிரச்சனையாக இருந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் தற்போது ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுவதும் பிரச்சனையாகி உள்ளது.

டெல்லி
இந்த நிலையில்தான் தெற்கு டெல்லியில் நவராத்திரியை முன்னிட்டு அசைவ கடைகளை அடைக்க டெல்லி தெற்கு மேயர் முகேஷ் சூர்யன் உத்தரவிட்டுள்ளார். இந்துக்களின், விரதம் இருப்பவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் கடைகளை அடைக்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஏப்ரல், 2- 11 வரை மொத்தம் 10 நாட்கள் மாமிச கடைகளை மொத்தமாக மூட வேண்டும் என்று இவர் உத்தரவிட்டுள்ளார்.

என்ன உத்தரவு
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், நவரத்திரி என்பது இந்துக்கள் கொண்டாடும் புனித பண்டிகை. இந்த பண்டிகை காலத்தில் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். கடுமையான சைவ உணவு விரதத்தை கடைபிடிப்பார்கள். அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அதேபோல் மது அருந்த மாட்டார்கள். கோவிலுக்கு அருகே இருக்கும் பகுதிகளை சுத்தம் செய்து அலங்காரம் செய்வார்கள்.

மாமிசம் கூடாது
இந்த நாட்களில் இந்துக்கள் தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். ஏன் பலர் வீடுகளில் வெங்காயம், இஞ்சி கூட பயன்படுத்த மாட்டார்கள். அதேபோல் அவர்கள் பொது இடங்களிலும், கோவில்களிலும் மாமிசங்களை காட்சிப்படுத்தப்படுவதை விரும்ப மாட்டார்கள். இதனால் அவர்களின் மத ரீதியான உணர்வுகள் புண்படும்.

மாமிசம்
அதேபோல் மாமிசங்களை அவர்கள் பொது இடங்களில் பார்ப்பதாலும், அதன் நாற்றத்தாலும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மத ரீதியான நம்பிக்கை இதனால் பாதிக்கப்படும். பொது இடங்களில் மாமிச கழிவுகளை போடுவது, அதை நாய் சாப்பிடுவதும் சுகாதாரமான விஷயம் கிடையாது. அது சுகாதாரம் இல்லை என்பதை தாண்டி, மக்கள் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்க விரும்ப மாட்டார்கள்.

தடை
அதனால் தெற்கு டெல்லி முழுக்க நவராத்திரி நடக்கும் ஏப்ரல் 2- ஏப்ரல் 11 வரையிலான நாட்களில் மாமிசம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்துக்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை, சுத்தத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறி மாமிசம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் ஒருவர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லியில் இதுவே முதல்முறையாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications