"ரெஸ்ட்" எடுத்துவிட்டு.. மீண்டும் வேகமாக புறப்படும் தென்மேற்கு பருவமழை.. ஜூலை 8 முதல் மீண்டும் மழை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்மேற்கு பருவமழை காரணமாக மீண்டும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்யும், இடையில் பெய்யாமல் இருந்த மழை மீண்டும் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை எல்லா வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 4 மாதங்களுக்கு செப்டம்பர் வரை வீச கூடிய தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஏற்பட கூடிய மழை ஆகும். இந்த மழையில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டாலும் கூட இந்தியாவின் மொத்த விவசாயத்தில் பெரிய பாதிப்பும், இழப்பும் ஏற்படும்.

Southwest Monsoon to revive on June 8 after almost 3 weeks of break Southwest Monsoon to revive on June 8 after almost 3 weeks of break

இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை முதல் இரண்டரை வாரங்கள் நன்றாக மழையை கொடுத்தது. ஜூன் 19க்கு பின் திடீரென குறைந்த மழை, அப்படியே காணாமல் போனது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வார இடைவெளிக்கு பின் மீண்டும் ஜூலை 8ம் தேதியில் இருந்து மீண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ராஜீவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு, மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு மத்திய இந்தியாவில் மழை பொழிவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஜூலை 12ல் வங்க கடலில் காற்றழுத்த மாறுபாட்டிற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

தென்மேற்கு பருவமழை இந்த வருடம் இன்னும் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேற்கு ராஜஸ்தான் மாநிலங்களை அடையவில்லை. பல மாநிலங்களில் 2 -3 வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ஜூலை 8ல் இருந்து மீண்டும் ஆரம்பிக்கலாம். ஜூலை 7 வரை இதற்கான வானிலை நிலவவில்லை. இதற்கு முன் தென்மேற்கு பருவமழை மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை. அடுத்த 4-5 நாட்களுக்கு இந்திய தீபகற்பத்தின் வடமேற்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் மட்டுமே மழை பெய்யும்.

அதன்பின் வட மாநிலங்களில் மழை பெய்யும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ராஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+