இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆய்வு.. தனியாருக்கு அதிரடி அனுமதி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இந்தியாவில் விண்வெளி துறை மற்றும் அணுக்கதிர் ஆராய்ச்சி துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் விண்வெளி துறை மற்றும் அணுக்கதிர் ஆராய்ச்சி துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த வாரம் 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதை தொடர்ந்து நான்காவது நாளாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார்.

பல்வேறு துறைகளில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது. அதில், வேற்று கிரக ஆய்வு, விண்வெளி பயணம் போன்றவற்றுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய தனியார் துறைக்கு அனுமதி அளிக்கப்படும். சாட்டிலைட் வழங்கும் ரிமோட் சென்சிங் தரவை விவரங்களை தனியார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
இஸ்ரோ வசதிகள் மற்றும் இஸ்ரோவின் பிற தொழில்நுட்பங்களை தனியார் துறை பயன்படுத்திக் கொள்ளலாம். இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ராக்கெட் ஏவுதலில், ஏவுதளங்கள் அமைப்பில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல் அணுக்கதிர் ஆராய்ச்சியில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். ஐசோடோப் ஆய்வுக்கு பிரத்யேக அணுக்கூடம் அமைக்கப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கு இந்த ஆய்வு பயன்படும்.
அணு ஆராய்ச்சிகளில் தொழில் முனைவோர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல் உணவு பதப்படுத்துதல்மற்றும் விவசாய ஆராய்ச்சிகளில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications